பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 அ - 1 - 3 - நீத்தார் பெருமை - 3

பொழிப்புரை: ஐந்து புலன்களையும் அவற்றின் வேகத்தை அடக்கிப் பக்குவப்படுத்தியவன் ஆற்றலுக்கு அகன்ற வானத்தில் உள்ளவர்களாகக் கருதப் பெறுவோர்)களின் அரசன் (எனக் கொள்ளப் பெறும் இந்திரன் என்பவனே சான்றாக அமைவான்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. அவித்தல் - அடக்குதல்; பொறிகளின் வேகத்தை அடக்கி நெறிப்படுத்துதல் அல்லது பக்குவப்படுத்துதல் ஆற்றல் இல்லாமலே செய்தலன்று. சென்ற குறட்பா உரையினும் இது தொடர்பான விளக்கங்களைக் காண்க.

2. ஆற்றற்கு - ஆற்றலுக்கு பரிமேலழகர் உள்ளிட்ட சிலர் ஆற்றல்' என்று பாடங்கொண்டு, நான்காம் உருபு செய்யுள் விகாரத்தான் தொக்கது என்பர். ஆற்றற்கு எனவரினும் புணர்ச்சியான் யாப்புப் பிழைபடாதாகலின், பொருளுக்குத் தக ஆற்றற்கு என்றே கொளப்பெற்றது. 3. அகல் விசும்புளார் கோமான் - அகன்ற வானத்தின்கண் உறைவதாகக் கருதப்பெறும் தேவர்களின் அரசன். இக்கருத்து ஆரியக் கற்பனை ஆதலாலும், அக்காலத்திலிருந்து அழுத்தமாக மக்களிடம் பற்றிய அறிவியலுக்குப் புறம்பான, வேதமதம் சார்ந்த மூடநம்பிக்கை யாதலாலும், ஆசிரியர் காலத்து அறிவியல் நோக்கற்ற உணர்வால் அவரும் தவறாகக் கொண்ட கருத்திதுவெனலாம். அரிய கற்று' என்னும் (533 குறளில் ஆசிரியர் கூற்றையும் ஒர்க - - 4. இந்திரன் - இந்திரம் எனும் ஒரு பதவியின் பெயரால் அமைந்த

பெயர். ஆரிய வழியினது. , , நூறு அசுவமேத யாகங்களைச் செய்து அப்பதவியைப் பெறுவோன், இந்திரன் என்று அழைக்கப் பெறுவதாக ஆரியத்தொன்மங்கள் (புராணங்கள்) கூறும். - . ஒரு முறை இப்பதவி பெற்றவன் அதில் நிலைத்திருக்க வேண்டி, மேலும் ஒருவர், தம்மைத் தவிர்த்துவிட்டு அப்பதவியைக் கைப்பற்றுவான் வேண்டி, அவ்வாறு கடுமையான தவங்களை மேற்கொள்ளின், இவன் அவற்றைப் பலவகையாலும் தடுப்பான் என்பதும் அத்தொன்மங்களால் கூறப்பெறும் கருத்து. இவன் பல திருவிளையாடல்களில் ஈடுபட்டதாக உள்ள கதைகளை இராமாயணம், பாரதம், பாகவதம், இரகுவம்சம், காந்தம், முதலிய ஆரியச் சார்பு நூல்களிலும், திருவிளையாடல் புராணம், காஞ்சிபுராணம் முதலிய தமிழ்ச் சார்பு நூல்களிலும் கண்டுகொள்க