பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

116


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் } | 6

அறவழிச் செயல்களாம். அவை, உலக மக்கள் உய்வுக்காகச் செய்யப் பெறுபவையாகலின், துன்பும், துயரும் உடல் வருத்தமும் மிகுந்தவையும், தந்நலப் பயன் குறைந்தவையும் ஆம். எனவே, அவற்றை எளியார் அன்றிப் பெரியார் மட்டுமே செய்குவர். இதில், சித்து அறிந்தவர்தம் திறன்களைச் சிலர் சுட்டுவர். அவர்கள் துறவின் பெருமைக்குரியர் அல்லராகலின், துறந்து அரிய செய்வாரையே ஈண்டுக் குறித்தார் என்க. பெருமைக்கும் (50) பெருமை உடையவர் 1975) என்னும் குறட்பாக்களிலும் இக்கருத்தை வேறு வகையான் வலியுறுத்துவார். 2. செய்வார் பெரியர் - செய்பவர் பெரியவர். இதில் கூறப்பெறும் பெரியார் என்னும் குமுகாயப் பெரியவர்களுக்கு நூலாசிரியர் மிக உயர்வு தரக்கூறுவர். பொருட்யாலில் பெரியாரைத் துணைக் கோடல் என்னும் ஓர் அதிகாரத்தையும், பெரியாரைப் பிழையாமை என்னும் மற்றோர் அதிகாரத்தையும் எழுதுவர். இவையன்றி, ஆங்காங்கே, அவர்தம் பெருமையைச் சான்றாண்மை அதிகாரத்தாலும், பெருமை, மானம், நானுடைமை அதிகாரங்களிலும் கூறுவர். அவர் தன்மையை மேலும் விரிவாகப் பண்புடைமை அதிகாரத்துக் கூறுகையில், பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்' என்று பெருமை சாற்றுவர். அவர்களைப் பின்பற்றச் சொல்லிக் குமுகாயத்தை மீமிசைக் குமுகாயமாக்க எல்லாருக்கும் அறிவுறுத்துவர். இந்நிலைகளுக்கு மாறுபட்டு இயங்குவாரைக் கயவர் என்று கயமை'

அதிகாரத்துள் இழித்துக் கூறுவர். - 3. செய்கலாதார் செய்ய இயலாதவர்கள், அல்லது அதன் கடுமை

கருதிச் செய்ய விரும்பாதவர்கள். . 4. செயற்கு அரிய அறிவின்வழிப்பட்ட செயல்கள்: சில எடுத்துக் காட்டுகள். -

1. அறிவியல் ஆய்வுகள், செயல்கள் 2. உலக நாடுகள் தொடர்பான ஆய்வுகள், வரலாறு முதலியவற்றில்

ஈடுபடல், 3. அரசியல், பொருளியல், மக்களியல் தொடர்பான சீர்திருத்த

முயற்சிகள், ஆளுமைத் திறப்பாடுகள். 4 அறிவு, அறிவியல், மருத்துவயியல், மக்களியல், வரலாறு, துண்கலை, அரசியல், பொருளியல், இனவியல், உயிரியல், மொழி, பண்பாடு முதலிய ஆய்வு நூலாக்கங்கள் முதலியவை. -