பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 அ - 1 - 3 - நீத்தார் பெருமை - 3

5. செயற்கு அரிய மனத்தின்வழிப்பட்ட செயல்கள்: சில எடுத்துக்காட்டுகள்:

1. மக்கள் மனவியல், குமுக மனவியல், தொடர்பான ஆய்வுகள். 2. மன அறிவியல், மன மருத்துவவியல், தவம், ஒகம், ஊழ்கம் பொறிகளொடுக்கம்) பகுத்தறிவியல், மெய்ப்பொருளியல், மாந்தவியல், கற்பனையியல், மதவியல் போன்றவற்றில் ஆய்வும் ஈடுபாடும். 3. அறத்தொண்டு, மதவியல் தொண்டு, பொதுத் தொண்டு,

ஈகைநலன்கள் முதலியவை. 6. உடல்வழிப்பட்ட எளிய செயல்கள்: வணிகம், கலை, உழவு, தொழில், உடல் திறன்கள், மற்றும் பொருளிட்டத்திற்கான முயற்சிகளும் அவற்றின் விளைவுகளும். 7. முன்னர்க் கூறப்பெற்ற கடுமையான அறச்செயல்களைச் செய்ய மாட்டாதவர்கள், இயலாதவர்கள், விரும்பாதவர்கள், தந்நலமுடையவர்களாதலின் சிறுமையுடையவர்கள் என்றார்.

O

உஎ சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு. 27

பொருள் கோள் முறை

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு.

பொழிப்புரை நம் உடம்பின்கண் உள்ள ஐம்பொறிகளாகிய, சுவையை அறிவதற்குரிய வாய் என்னும் நாக்கு, ஒளியால் விளங்கும் காட்சிகளைக் காணுதற்குரிய கண், ஊறு உணர்வென்னும் தொடு உணர்வுக்கு அடிப்படையாகிய நாடி நரம்புகளைப் போர்த்து நிற்கும் தோலின்தாகிய மெய், ஓசையைக் கேட்பதற்குரிய செவி, நாற்றங்களை முகர்ந்து அறிவதற்குரிய மூக்கு எனும் பிண்டப்பொருள்களின் தன்மைகளாகிய) சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் புலனறிவுகள் ஐந்தினையும், அவற்றின் அண்டப்பெருக்க வகைகளாகிய நீர், தீ, நிலம், வெளி வான்) - வளி (காற்று) ஆகிய ஐந்து பூதப் பொருள்களின் ஆற்றல் உண்மைகளையும்,