பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

120


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 120

பயனையும் உணர்த்துவது. இந் நூலாசிரியர்க்கு உற்ற பெருஞ்சீர் போன்றது. -

4. நிலத்து - என்றது, எல்லை தவிர்ந்து, இவ்வையகம் முழுவதும், ஆங்காங்குத் தோன்றி அறம்பரப்பிய நிறைமொழி மாந்தர்தம் புகழ்ப் பரப்பை உணர்த்துவது. -

5. காட்டி விடும் - என்றது, நிறைமொழி மாந்தர், மக்களினத்திற்கு என்றென்றும் பயன்படுமாறு உணர்த்தப்பெற்ற மறைமொழிகளை, அவ்வக் காலங்களில், அவ்வவ்விடங்களில் தோன்றி வாழும் மக்கள் தொகுதிக்கு அவையுணருமாறு அடையாளம் காட்டுவதற்கு உதவும் புகழ்த்தன்மையை உணர்த்துவது என்க. என்னை? இம் மறை நூலையும், இது போன்றவற்றையும் மக்கட்கு அடையாளங் காட்ட இந் நூலாசிரியரதும், இவர் போன்ற நிறைமொழி மாந்தரதும், புகழ் உதவினாற் போல என்க. என்னை? நூலாசிரியர் பெருமையைக் கேட்டே, அதன் மறைமொழிகளை அறிய அவாவுறுகிறோம் ஆகையினான். .

6. மாந்தர் - என்றது உயர்மக்களை.

உக. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்த லரிது. - 29

பொருள் கோள் முறை

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி கனம் ஏயும் காத்தல் அரிது. .

பொழிப்புரை (அறவுணர்வால் மேம்பட்டு உயர்ந்து நிற்கும் நற்குணம் என்னும் குன்றில் படிப்படியாய் ஏறி (மீண்டும் சறுக்கலோ கீழிறக்கமோ இன்றி, அங்கேயே நின்று கொண்டிருக்கும் பேரறிவாளர்தம் வெகுளி, ஒரு கண்ணிமைப் பொழுதே தோன்றிச் செயல்பட்டு மறைந்துபோகும் தன்மையுடையது) ஆனாலும், அவ்வெகுளிக்குக் காரணமானவர் அதன் தாக்கத்தினின்று தம்மைக் காத்துக்கொள்ளல் கடினமானது.

சில விளக்கக் குறிப்புகள்:

1. குணமென்னும் குன்று ஏறி நின்றார் - குணக்குன்று என்று கூறத்தக்க அறமுனைவர். குறை எதுவும் இன்றி நற்குணங்களே உருவாகி நின்றவர் எந்நிலையிலும் அந்நற்குணங்களினின்று தாழாதவரை