பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#29

அ - 1 - 4 - அறன் வலியுறுத்தல் - 4

இங்கு ஆறு சமயங்கள் என்பன பல்வேறு வகைகளில் கூறப் பெறுகின்றன. அவை காலந்தோறும் வேறு வேறாக வரிசைப் படுத்தப் பெற்றுள்ளன. இவையெல்லாம் ஆரியச்சார்பாகவே வளர்ந்து வந்துள்ளனவாகக் காணப் பெறுகின்றன. மிகப் பழங்காலத்தில் இவை, வைரவம் : வைரவனை (அஃதாவது சாம்பலும் மண்டை யோட்டு மாலைகளும் தாங்கிய கானுறை சிவனை) வழிபாட்டுத் தலைவனாகக் கொண்டது. வாமம் : பெண்ணைத் தலைவியாகக் கொண்டு பெண்குறியை வழிபடுவது.

. காளாமுகம் : இதுவும் பெண்வழிபாட்டுச் சமயம். ஆனால் திருந்திய

நிலையில் காளியை வழிபடுவது.

. மாவிரதம் : ஆண்குறிவடிவாகிய ஆவி உருவை வழிபடுவது.

. பாசுபதம் : சிவனை வழிபடுவது. அஃதாவது, பதி (தலைவன்), பசு

(ஆதன் என்னும் ஆன்மா) பாசம் (பிறவிக்குக் காரணமாகிய பற்று - ஆகிய முந்நிலைக் கொள்கை தோன்றிய காலகட்டம் இது.

. சைவம் : ஆற்றலும் (Energy சக்தி), பொருளும் (Matter) (சிவன்)

- ஆகிய சிவையையும் சிவனையும் வழிபடுவது. இவை ஆறையும் உட்சமயங்கள் அஃதாவது மூல அடிநிலைச் சமயங்கள் என்று கொள்கின்றனர். இவற்றுள் உள்ள பெண் வழிபாடுதான் பிறகு மாலியமாகத் திரிந்தது என்றும் கூறுவர். இனி, இவையல்லாத வேதாந்த மதங்களாக ஒர் ஆறையும் அடுத்த நிலையில் கூறுவர். - -

அவையாவன: கபிலம் : கபிலர் என்னும் முனிவர் நிறுவிய சாங்கிய மதம். இது கடவுளை மறுப்பது. மற்றது. மெய்ம்மங்கள் இருபத்தைந்து எனவும்,

அவற்றுள் இருபத்தைந்தாவது மெய்ம்மமே ஆதன் (புருடன்)

என்பதும், அவன் மற்ற இருபத்து நான்கையும் பிரித்தறிந்து, மாயை (அறியாமையை நீக்குவதே முத்தி இறைப்பேறு என்பதும் ஆம் கணாதம் : இது கணாதர் என்னும் முனிவரால் நிறுவப்பெற்ற வைசேடிக மதம். இது மூலப் பொருள்கள் ஏழென்பது. இது தருக்க

முறையில் உலக மெய்ம்மங்களை ஆராய்வது.

- 3.

பதஞ்சலியம் : பதஞ்சலி என்னும் முனிவர் உருவாக்கிய மதம்.

4. அக்ஷபாதம் : நையாயிக மதம் கெளதம முனிவன் செய்தது. நியாய

சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.