பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 அ - 1 - 4 - அறன் வலியுறுத்தல் - 4

5. பாஞ்சராத்திரம் : பிரம்மாவிற்கு விஷ்ணு விளங்கக் கூறிய மதம். நாராயணனை வழிபட்டு வைகுண்ட சாரூப பதவியை அடைய விரும்புவர், இம் மதத்தார் என்பர். 6. பாட்டாசாரியம் : குமாரிலபட்டர் தோற்றுவித்த மதம். வேதமே தெய்வம்

என்பது இதன் கொள்கை - இனி, இவையன்றிப் புறச்சமயங்களாகக் கூறப்பெறும் இன்னும் ஓர் ஆறு மதங்கள் வருமாறு. இவ்வெண்ணிக்கை வரிசையில் முன்னர்க் கூறிய பல பிரிவுகளில் அடங்கும் பல மதங்களும் இடம் பெற்றுள்ளது கவனிக்கத் தக்கது. அவை வருமாறு : 1. பெளத்தம், ஜைனம், பைரவம், காளாமுகம், உலோகாயதம்,

சூன்யவாதம் ஆகியவை. -

. இவ்வரிசையில் சூன்யவாதம் என்னும் மதமே புதியதாகும்.

- இச் சூன்யவாத மதம் என்பது இவ்வுலகில் உள்ள அனைத்துமே

ஒன்றுமில்லை. எனவே கடவுளும் இல்லை என்பது. - இனி, மேற்கூறிய ஐவகையான ஆறு ஆறு சமயங்கள் எனும் முப்பது சமயங்களன்றி, இன்னும் சில சமய வகைகளைச் சேர்த்தும், குறைத்தும், விடுத்தும், கூட்டியும், புதுவகையான புதுப்பெயர் சூட்டியும் சமய வகைகள் முப்பத்து நான்கு என்றும் மொழிகுவர். . இவை பெரும்பாலும் ஆரிய ஏமாற்றுகளையும், கற்பனைகளையும்,

மூடநம்பிக்கைகளையுமே அடிப்படையாகக் கொண்டவை. - எனினும் இச்சமயங்களெல்லாம் அழிந்துபோகக் கூடாது என்பதும், அவ்வாறு அழிந்து போமாயின் தங்கள் வேதமதக் கொள்கையும் கோட்பாடுகளும், அவற்றின் வழி நிறுவிய வர்ணாச்ரம தர்மநெறிமுறைகளும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு தாங்கள் கட்டுவித்த இன ஆளுமைகளும், ஆட்சி அதிகாரங்களும், அழிந்துவிடக் கூடாது என்பதும் ஆரியரது உட்கோளாகும்.

- மேலே கூறிய மதம் அல்லது சமயங்களுள் பல தமிழியலை அடிப்படையாகக் கொண்டவை. அவை பல படிநிலை வளர்ச்சி பெற்று இறுதியில் சிவனியம், மாலியம் என இருசமய வடிவங்களாக நின்றனவேனும், அவற்றுள்ளும் ஆரியக் கலப்பு நேர்ந்து, மொழி நடையில் மணிப்பிரவாளம் போல், சமய நடையுள் தமிழிய ஆரிய மதமாகி இற்றை இந்து மதம் என்னும் இறுதி வடிவில் நின்றுவருகின்றன என்க. இவற்றை விரிக்கில் மிகப் பெருகுமாகலின்,

இவ்வளவில் நிறுத்தி மேலே போவோம். - - இவற்றின் மிக விரிவான வரலாற்றை இதன் நிறைவுரையில் காணலாம்.