பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 அ - 1 - 4 - அறன் வலியுறுத்தல் - 4

உங். பிறர் துயர் காத்தல் : நோய் வாய்ப்பட்ட, புண்பட்டவர்களுக்கு

உதவுதல். உச தண்ணிப் பந்தல் : வழிப்போக்கர்க்கு விடாய் தணிக்க வழியில்

தண்ணிர்ப் பந்தல்களை அமைப்பது. உரு. மடம் : பிராமணர்கள், மற்றவர்கள் ஆகிய வழிப்போக்கர்கள், சமயப் போக்கர்கள் இடையிடைத் தங்க, அவர்களை உண்பிக்க மடங்கள் கட்டித் தருதல். உசு தடம் : ஊரார்க்குதவும்படி நன்னீர்க்குளங்களை அமைத்தல். உன. சோலை : வழிப்போக்கர்கள் நிழலில் தங்கிப் போகச்

சோலைகளையும் மரத்தோப்புகளையும் அமைத்தல். உஅ ஆவுரிஞ்சு தறி : மாடுகள் தங்குவதற்கும் உடம்புகள் சொறிந்து கொள்வதற்கும் வைக்கோல் போர்களையும், தினவுக்கற்களையும் இடையிடை யமைத்தல். உது. விலங்கிற்குணவு : எல்லா வகை விலங்குகளுக்கும் (ஆடு, மாடு, குதிரை, கழுதை, ஒட்டகம் போன்றவற்றிற்கு) உணவுக் கொட்டில்களை அமைத்தல், - க.0. ஏறு விடுதல் : ஆக்கள் சினையுற ஏறுகளை வளர்த்து விடுதல். ந.க. விலை கொடுத்து உயிர் காத்தல் : உயிர் போகும் தறுவாயில் அடிமையோ, அடமானமோ, நோய்வாயோ பட்டவர்களுக்காகப் பணம் தந்து அவர்களின் உயிர்களைக் காத்தல். கஉ. கன்னிகாதானம் : திருமணம் ஆகாத ஏழை, எளிய, ஏதிலிப்

பெண்களுக்குத் திருமணம் செய்ய உதவுதல்,

இனி இவையேயன்றித் தமிழியல் முறையில், அறத்தின் உள்ளுறுப்புகளாகக் கீழ்வரும் எட்டு உணர்வு நிலைகளும் கூறப் பெறுகின்றன. 1. ஐயப்படாமை : எந்தக் கருத்தையும், எந்த மெய்ம்மையையும் ஐயுறுதல் என்பது ஒரு மனநிலை. எதையும் ஆராயாமல் ஏற்க விரும்பாமை. எந்தக் கருத்திலும் உறுதிப்பாடின்ம்ை - எதிலும் கருத்து முடிவின்மை - எந்த நலவுணர்விலும் நம்பிக்கையின்மை நல வெறுப்புணர்வு (Scepticism) - - இவ்வாறின்றி உண்மையான கருத்தை ஐயப்பட்ாது ஏற்றுக்

கொள்கின்ற உணர்வு ஒர் அறவுணர்வாகும். 2 விருப்பின்மை : எதையும் அவாவுகிற ஆசைப்படுகிற தன்மை

(Covetousness) @orgoud.