பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

1







அ. அறத்துப்பால்

முன்னுரை
'கடலக வரைப்பின்இப் பொழில்முழு தாண்டநின்
முன்திணை முதல்வர்'                  - பதிற்று 14.

- எனும் பாடலடி, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டுர்க் கண்ணனார் பாடியது. இதில் இவ்விந்திய நாடு முழுமையும் தமிழரால் ஆளப்பெற்றமை குறிக்கப்பெற்றது.

'கல் ஓங்கு நெடுவரை வடதிசை எல்லை இமயம் ஆக, தென்னம் குமரியொடு' அற்றை, 'இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கித்' தோன்றியது.
தமிழரின் ஆட்சி வரலாறு மட்டுமன்று, அவர்தம் பண்பியல் மாட்சி வரலாறும் மிகச் சிறந்து விளங்கித் தோன்றியிருந்த பெருமை உலகம் அறிந்தது.
இப்பண்பியல் மாட்சியின் பெருமைக்குத் திருக்குறளே தலைசிறந்த சான்றாக நின்று நிலவுகிறது என்பதை எவரும் மறுத்தற் கியலாது.
தமிழரின் மிக்கோங்கிய பெருமைப் பண்புக் கூறுகளில், ஆறவுணர்வு என்பது மாந்த மனத்தினது நறுமணம் கொழுவிய ஒரு மலர் போல் ஆகும் எனில் மிகையாகாது.