பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 அ - 1 - 4 - அறன் வலியுறுத்தல் - 4

அறிவுக்கும் மனத்திற்கும் உடலுக்கும் பொருந்திய முடிந்த, இயன்ற வகையிலெல்லாம். என்னை? அறிவுக்குப் பொருந்தியது மனத்திற்கும், இரண்டிற்கும் பொருந்தியது உடலுக்கும் பொருந்தாமல், முடியாமல், இயலாமல் போகலாம் ஆகலின் முடிந்த வகையிலெல்லாம் என்றார். 2. அறவினை - பொதுநலம் சார்ந்த நல்ல செயல்கள், வினை என்பது விளைவுக்குரிய செயல். செயல் என்பது செய்ய முடிந்த செயல். 'வினை அறிவும் மனமும் தழுவியது; செயல் உடல் தழுவியது. 3. ஒவாதே - ஒழியாமல், தவறாமல், தவிராமல், உவ விரும்பு, ஏல்) என்னும் வேரடியாகப் பிறந்த சொல். உவத்தல் - விரும்புதல். உவாதல் - விரும்பாதல், ஏலாமல், தவிராமல், உவாதே - ஒவாதே. ஒய்வு . ஒவு (தொகுத்தல் திரிபு - ஒவாதே - ஒய்வில்லாது, ஒழியாது என்று விளக்கியும் பொருள் கூறுவர். 4. செல்லும் வாய் - செய்ய வாய்க்கும் வழியிலெல்லாம்; செய்ய வேண்டிய

இடத்திலெல்லாம். 5. செயல் - செய்க. முன்னிலை ஏவல், கட்டளைச் சொல். செயலுக்குக்

கொணர். செய்து முடி. 6. இஃது, அறவுணர்வை எவ்வாறு செயற்படுத்துதல் வேண்டும்

என்பதால் அவற்றின்பின் வைத்தார். O

கச மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற. - 34

பொருள் கோள் முறை :

அனைத்து அறன் மனத்துக்கண் மாசு இலன் ஆதல், பிற ஆகுல நீர.

பொழிப்புரை எல்லா வகையானும் அறம் என்பது ஒருவன் தன் மனத்தின் கண்ணே குற்றம் இல்லாதவனாக ஒழுகுவது. இதுவன்றி மனத்தே மாசு உள்ளவனாகவும், புறத்தே (அறவுணர்வு உள்ளவன் போல் புனைந்து கொண்டும் நடக்கும் பிற கோலங்கள் செயல்கள் யாவும் (வெறும்) ஆரவாரத்தன்மை உடையனவாகும். - -

சில விளக்கக் குறிப்புகள் :

1. மனத்துக் கண் மாசு இலன் ஆதல் - உள்ளத்தின் கண்ணே குற்றமுள்ள