பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

150


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் }50

நூலாசிரியர்க்குப் பல்பிறவிக் கொள்கை உண்டு எனினும், பிறப்புறுக்கல் என்னும் முயற்சி, வாழ்வியல் துறந்த துறவிகளுக்கே உடையதாகவும் சிறப்பாகவும் நூலுள் பலவிடங்களில் காட்டியுள்ளார். பிறப்புறுக்கல் விரும்பியார்க்கு உடம்பும் மிகை (345) என்றவர், அவ் வுடம்போடு கூடி, வீழ்நாள் படாது நன்றாற்றுதல் செய்வது பிறப்பறுக்கும் என்று கூறுவதாகக் கருதுவது முரணுமன்றோ? என்னை? உடம்பிருந்து தானே நன்றாற்றுதல் இயலும். அவ்வாறு நன்றாற்றல்தானே பிறப்புறுக்க உதவும். அஃதாயின், மிகையான உடம்பைக்கொண்டு நன்றாற்றுதல் செய்தல் வாழ்நாள் வழியடைக்கும் என்று எங்கனம் கூறுதல் செய்வார்? ஒர்க. - இனி, பற்றறுத்தல்தான் பிறப்புறுக்கும் 4ே9, என்பார், உடம்பிருந்து அறஞ்செய்தல் எவ்வாறு பற்றறுத்தல் ஆகும் என்று கூறுவார்? இதனையும் ஒர்க - அடுத்து, செம்பொருள் (ஞானம் காண்பதே பிறப்புறுக்கும் (358) என்பவர், உலகியல் தொடர்பால் நாளும் அறஞ்செய்வதும் பிறப்புறுக்கும், என்று யாங்கன் கூறுவார்? ஓர்க,

- இவ்வாறு ஈண்டு எடுத்துக்காட்டிய கருத்துகளின் முடிவுகளால், 'பிறப்புறுக்கல் துறவியருக்குரிய பற்றறுக்கும் கடிய முயற்சி யென்பதும், வாழ்வியலுக்கு அது தேவையின்று' என்பதும், ஆகையினால், வாழ்நாள் வழியடைக்கும் கல்' என்று, அவர் இங்குக் கூறியது, பிறப்புறுக்கும் முயற்சியை அன்று என்பதும், இயல்பினான் வாழும் (4) முயற்சியே அறம் செய்வதற்கு இயல்வதாம் என்பதும், அதுவேவாழ்வைச் சமநிலையுடையதாக்கி, எளிமையும் பயனும் உடையதாகச் செய்யும் என்பதுமே ஆசிரியர் கருத்தாதல் பெற்றாம் QT@T。.

- இவ்விடத்துச் சிற்சிலர் கொள்ளும் வழியடைக்கும் என்பதற்கு, 'வழியமைக்கும் என்று பாடங் கொள்ளின், கருத்து வேறுபாடு எதுவும் நிகழ்தற்கில்லை என்றும் கூறலாம் என்க. -

மேலும், துறக்கம் எனப்பெறும் வீடுபேறு பற்றி எதுவும் கூறாது, முழுவதும் உலக வாழ்வியலுக்காகவே செய்யப்பெற்ற இவ்வரிய நூலின்கண், நூலாசிரியர் உயிர் வாழ்க்கையையோ, பிறப்பையோ, எங்கும் எந்நிலையிலும், பழித்தோ, இழித்தோ, தாழ்த்தியோ கூறிற்றிலர். மாந்தப் பிறவியைத் தாழ்த்திப் பேசுதல் தமிழியல் அன்று. வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின் என்பார் திருநாவுக்கரசர்.