பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

அ - 1 - 4 - அறன் வலியுறுத்தல் - 4

அஃது ஆரியவியலின் வேதமதக் கொள்கை என்க. ஆரியரின் வேதமதம் இற்றை இந்துமதம் எனும் புதுப்பெயர் பூண்டு வழங்கும். - ஆனால், அதற்கு மாறாக வாழ்க்கையை உயர்த்தியும், பெருமைப்படுத்தியும் சிறப்பித்தும் தேவையென வலியுறுத்தியுமே, தெளிவாகவும், உறுதியாகவும், நூலுள் பலவிடங்களில் அழுத்தமாகக் கூறியுள்ளார். அவற்றுள் கீழ்வருவன சில:

அ) பழிவந்து சேரவிடாமல், வந்து சேரும் வாழ்வியல் நலன்களைப் பிறர்க்கும் பகுத்துக் கொடுத்து வாழ்பவர் குறையில்லாத நிறைவாழ்க்கை உடையவராவார். (44)

ஆ பொதுமை நலம் கருதிய அறவழியிலே ஒருவன் இல்வாழ்வை நடத்துவானானால், அவன் துறவு மேற்கொள்வதால் பெறும் பயன் ஒன்றுமில்லை. (4) இங்குப் பிறப்புறுத்தலையும் உள்ளடக்கியே கூறுவாா.

இ) இயல்பான குண நல முயற்சிகளுடன் வாழ்பவன் தவஞ் செய்யும் துறவிகளைவிட மேலானவன். (4)

ஈ) பொதுநல அறவாழ்வு மேற்கொண்டு வாழ்பவன், வீடு பெற நோற்கின்ற துறவியரைவிடத் தவப்பேறு பெற்றவனாவான். (48)

உ) அறவாழ்க்கை என்று சிறப்பித்துக் கூறுவதெல்லாம் இல்லறத்தைத் தானே தவிர வேறு எதனையும் இல்லை. (49

ஊ) இவ்வுலகத்தில் வாழ்கின்ற முறையுடன் வாழ்பவனே வானில் இருப்பதாகக் கூறும் தெய்வங்களுடன் வைத்துப் போற்றப் பெறுகிறான். (50)

எ துறக்க உலகம் விட்டு உலகம் என்று பிறராலும், மோட்ச உலகம் என்று வேதியராலும் உள்ளதாகக் கற்பித்துக் கூறப்பெறும் மேலுலகம் பெறுதற்கு வாய்ப்பில்லை எனினும், ஒருவன் பிறர்க்கு ஈதல்தான் நன்று; அது மற்று நல்ல வழிக்கே எனினும், பிறரிடமிருந்து பெறுவது தீது ஆகும். (222) இவ்விடத்து, நேர்க்காட்சியாகவும் உண்மையாகவும் உள்ள வாழ்க்கையைவிட, மேலுலகம் செல்வதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்பது தெளிவாகப் புலனாகும் என்க)

ஏ ஈதலும், அதனால் பெரும்புகழ் பெற்று வாழ்தலும் தவிர, உயிர்களுக்கு (கவனிக்கவும் உடம்பு தவிர்ந்த உயிர்களுக்கு வேறு ஊதியங்கள், நலன்கள் என்பனவாக எவையும் இல்லை. (23)

ஐ ஒருவன் இவ்வுலகத்திலேயே வாழ்ந்து புகழ் பெறுவதே உண்மை. இது நிகழுமாயின், தேவருலகம் என்று வைதிகர்கள் கூறும்