பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

152


மேலுலகம், அங்குச் செல்வதாகக் கூறும் ஞானிகளைக்கூட மெய்யாகப் போற்றுவதில்லை. (234)

ஒ) உலகம் எவ்வழியில் எவ்வகையில் எவ்வாறு எப்படி இயங்குகின்றதோ, அது கண்டு, அவ்வாறு இயங்குவதே அறிவு. (42) (இங்கு உலகியல் தவிர்த்த வேற்றுலகக் கற்பனை அளவைகள் புறந்தள்ளப்பெறுகின்றன என்பது காண்க)

- இங்கெடுத்துக் கூறியவற்றால், 'வாழ்நாள்' என்பது இப்பொழுதே இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் 'வாழ்க்கைக் காலம்' என்பதும், 'வழியடைக்கும் கல்' என்பதற்குப் 'பிறவி வழியை அடைத்துவிடும் கல்' என்று பொருள் கொள்வது தவறு என்பதும், அது வாழ்க்கை வழியை அடைவு செய்ய நிறைவுறச் செப்பம் செய்ய சமமாக ஆக்க - தாங்குதற்கு உதவும் கல், என்றே பொருள் தரும் என்பதும் பெற்றாம் என்க.

- அடைக்கும் கல் என்பதற்குத் திரு. வி.க.வும் தம் திருக்குறள் விரிவுரையில் 'அமைக்கப்படும் கல்' என்றே பொருள் கொள்வர். ‘வாழ்நாள் வழியைத் தாங்குதற்குரிய 'அடைகல்' என்றபடி' என்பார்.

'ஆமையாய் மேருத் தாங்கி
அடைகலாய்க் கிடந்த போது'

- சிவஞான சித்தியார்.

'அடைகலான் ஆமையாக்கி'

- தக்கயாக பரணி.

- இனி, அடைத்தல் என்னும் சொற்குப் பள்ளத்தை அடைவு செய்தல், நிரப்புதல் என்றும் பொருளிருப்பது, பொந்துகளை அடைக்க', 'புரையை அடைக்க' 'பள்ளத்தை அடைக்க', 'சந்துகளை அடைக்க', 'குழியை அடைக்க', என்னும் உலக வழக்குகளையும் ஒப்பிட்டு உணர்க.

8. அற வாழ்க்கை, நம் வாழ்க்கை நிலைகளை எளிதாக்கிச் சமநிலைப்படுத்தும் என்பதை இதனால் உணர்த்தினார் என்க.

௦.

ங்க. அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழும் இல.
39


பொருள் கோள் முறை : இயல்பு