பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 அ - 1 - 4 அறன் வலியுறுத்தல் - 4

பெழிப்புரை பொது நலம் கருதிய அறச் செயல்களால் ஆகி வருவதே (மனத்திற்கும் அறிவிற்கும் உடலுக்கும் இன்பம் பயப்பது அஃதன்றிப் புகழும் விளைப்பது. மற்று, தன்னலம் கருதிய ஏனைச் செயல்களால் வருவன எல்லாம் இன்பந் தருவன அல்ல என்பதுடன் துன்பமும் பயப்பன; அஃதன்றிப் புகழல்லாது இகழும் தருவன.

சில விளக்கக் குறிப்புகள் : 1. அறத்தான் வருவதே இன்பம் - பொதுநலம் கருதிய அறச் செயல்களால் ஆகிவருவதே இன்பத்தைத் தருவதாகும். அறத்தான் வருவதே இன்பம் என்றதால், அறத்தான் வருவதே பொருளும் என்றாயிற்று.

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் (755 என்று ஆசிரியர் கூறுவதையும் கருதுக. - அறச்செயல்களால் ஆகி வருவன, உணர்வாயினும், பொருளாயினும், பிறர் நலன்களாயினும், அவையே மனத்திற்கும் அறிவிற்கும் உடலுக்கும் இன்பவுணர்வை ஊட்டக் கூடியனவாம் என்க. இதனால் எத்தகையானும், எவ்வழியானும் இன்பம் பெறலாம் என்னும் கருத்தை மறுத்தார் என்க. - பிறர்க்கு நலம் கருதினோம், செய்தோம் என்பது மனத்திற்கும், இன்னவகையில் அவை பிறர்க்கு நலத்தையும் மகிழ்வையும் தந்தன என்பது அறிவிற்கும், இவற்றுக்காக இயங்கியதும் முயன்றதும் உடலுக்கும் இன்பம் பயப்பன வாகும். இன்பம் என்பது உணர்வு நிறைவு; துன்பம் என்பது நிறைவேறா உணர்வு. 2. இங்கு, இன்பம் என்பதை, இல்லறத்தோடு பொருந்தி வரும் இன்பம் - அது காம நுகர்ச்சி என்று பரிமேலழகர் குறிப்பதும், அதைத் தொடாந்து சில விளக்கங்கள் தருவதும், அறவே பொருந்தா வென்க பொதுப்படக் கூறிய அறத்தைச் சிறப்பாக இல்லற வின்பத்திற்குக் கூறுவது, பொதுவறத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும். இவ்வாறு கூறவேண்டிய தேவையும் இங்கில்லை. - இதுபற்றி அறிஞர், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தம் மணிவிளக்க வுரையில் கூறும் விளக்கம் இங்குக் கவனிக்கத் தக்கது. அது வருமாறு: " . . . "காமம் ஒன்றையே பரிமேலழகர் இன்பமாகக் கொண்டார். இல்லறத்தானுக்குத் தன் மனைவி மூலம் வரும் அதுவே, அறத்தொடு வரும் இன்பமாம்; அது இன்பம் தருமாம்;