பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

154


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 154

புகழும் தருமாம் துறவி என்பவன் மனைவியில்லா தவனாதலால் பிறர் மனைவி மூலம் தேடும் காமம் அறமல்லாமல் வரும் இன்பமாம்” - "மிகச் சிறந்த உரையாசிரியரான பரிமேலழகர் இடைக்காலப் போலி ஆத்திகத்தை அணைத்ததனால் அடைந்த அவக் கேட்டினை இக் குறட்பாவிலேயே உச்ச அளவில் காணலாம்.” - "தெய்வத் திருக்குறளை எத்தகைய பழிகேடான கயமைக் கருத்துகளுக்கு அவர் இழுக்கிறார் என்பது மேலே காட்டப்பட்டுள்ளது'.

- (பக். 915) இனி, பாவாணரும் இதைச் சிற்றின்பம் என்று இகழ்ந்து கூறியதும்

இழுக்கே - - .

. மற்றெல்லாம் புறத்த அறமல்லாத வழிகளில் வருவன எல்லாம்

வேறுவேறு விளைவுகளை உடையன. - பொதுநலம் கருதிய அறமுயற்சிகள் உண்மை, நேர்மை, ஊக்கம், விடாமுயற்சி, ஒழுக்கம், நடுவுநிலைமை என்னும் அறவுணர்வுகளின் அடிப்படையில், நல்வழிகளில் நிகழ்வனவாகலின், அவற்றால் வருவன உலகியல் அளவில் சிற்சில கால் துன்பமாகவே விருப்பினும் அவை மனத்திற்கு இன்பம் சேர்ப்பனவே என்றுணர்க.

அவ்வாறு பொதுநலம் கருதாமல், தன்னலம் கருதிய மற முயற்சிகள்,

பொய்ம்மை, நேர்மையின்மை, பழி, இழுக்கம், நடுவுநிலையின்மை முதலிய மறவுணர்வுகளின் அடிப்படையில், அவ்வழிகளில் நிகழ்வன வாகலின், அவற்றால் வருவன உலகியல் அளவில், சிற்சில கால் இன்பமாகவே இருப்பினும் அவை தமக்கும் பிறர்க்கும் உள்ளத் தளவிலும் செயலளவிலும் துன்பமே விளைப்பனவாம் என்றும் உணர்ந்து கொள்க - -இனி, புறத்த என்றதால், துன்பம் மட்டிலன்றிக் களவும், கொலையும், தண்டமும் விளைவிக்கும் கொடுமைகளையும் உள்ளடக்கினார் 6Fদ্ধক্ষেত, .

4. புகழும் இல- அறங்கருதாமல் மறங் கருதிய செயல்களால் வருவன, போலிப் பெருமையும் புரைசேர் விளம்பரமும் ஆகலாமெனினும்,

. நிலையான இன்பத்தையும் அழியாத நீடிய புகழையும் தாரா வன்க,

5. முன்னைய குறளில் பொது நலம் கருதுவார்க்கு வாழ்க்கை