பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 - அ - 1 - 4 - அறன் வலியுறுத்தல் - 4

வழியெல்லாம் நிரவலும் சமமும் ஆகும் என்றவர், அவற்றால்

விளையும் நன்மைகளாகிய நிலையான இன்பத்தையும் நீடு புகழையும் இதில் கூறினார். -

{}

ச0. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.

40

பொருள் கோள் முறை :

ஒருவற்குச் செயற்பாலது ஒரும் அறனே;

உயற்பாலது ஒரும் பழி.

பொழிப்புரை : ஒருவன் தான் செய்ய வேண்டுவதாக ஆய்ந்து, கொள்ள வேண்டியது, பொதுநலம் கருதும் அறச் செயலையே! அதேபோல், ஆய்ந்து,

செய்யாமல் தள்ள வேண்டியது உலகோர் பழிக்கின்ற தவறான செயலையே. -

சில விளக்கக் குறிப்புகள் :

1. ஒரும் ஆய்ந்து, கொள்ளும்.

ஒரும் என்பன இரண்டும் அசைச் சொற்கள் என்று தவிர்க்க வேண்டுவதில்லை. சொல்லற்க சொல்லில் பயனில்லாச் சொல் (200) என்னும் கருத்துடையார் செய்யுள் நிறைவுக்கு அசைகளை வையார். ஒர்தல் - ஆராய்தல், மின் ஒரும் கண்ணாக, கலி 49-12 திரு. விகவும் இதனை ஒப்புவர். "ஒரும் இரண்டையும் அசைநிலையாக் கொண்டனர் பழைய உரையாசிரியர். சுருங்கிய குறட்பா ஒன்றில் ஒரே அசைநிலையை இரண்டு முறை பெய்ய ஆசிரியர் உளங் கொள்வாரோ என்பது சிந்திக்கத் தக்கது” என்று மேலும் அவர் விளக்கம் கூறுவர். - - திருக்குறள் விரிவுரை பாயிரம் பக். 359 - பொதுநலம் கருதும் அறச் செயலை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்றது. -

சில பொதுநல வுணர்வுகளும் செயல்களும், தன்னலத்தின்,