பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

164


திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 164

- அஃதன்றிப் பரிமேலழகர் வரிசையில் உள்ள பிறரும் அவரையே வழிமொழிந்து உரை தருவதும், அற்றைப் பரவிய ஆரியவியலின் அழுத்தத்தையே உணர்த்துகின்றது.

- அவர்களை விடுத்த, அண்மைக் காலத்து உரையாசிரியர் பலரும், பலவகையாக இதற்குப் பொருள் கொண்டு, மயங்கியவர்களேயாவர்.

சமணப் புலவர் கவிராச பண்டிதர், அவர்களை பிரமசாரி, சுல்லகன் (இவரும் துறவி போன்றவரே. ஆனால் துவராடையின்றி வெளிறாடை உடுப்பவர்), மாமுனி இவர் முற்றுந்துறந்தவர்) என்பார்.

இவர்கள் மூவரும் கானுறை வாழ்வினர் ஆகலின் இல்லறத்தார் இவர்களிடஞ் சென்று துணையாதல் இயலாது. எனவே இவருரையும் பொருந்தாதென்க. - வ.உசிதம்பரனார், அவர்களைத் தாயும், தந்தையும், தாரமும் என்பார். -

இதில், தாயும் தந்தையும் தாமே ஓர் இல்லறத்தார் ஆகலானும், தாரம் இன்றிக் கணவன் மட்டுமே இல்லறத்தான் ஆகான் ஆகலானும், மூவரும் தென்புலத்தார் (43) என்னும் குறளுள் குறிக்கப் பெறும் தான் என்பதுள் தனித் தனியே அடங்குவர் ஆகலானும் இவ்வுரையும் பொருந்தா தென்க. - திரு வி.க. திருவள்ளுவர் காலத்து ஊர் மன்றத் தலைவர் மூவர் இருந்திருப்பர் என்றும், அவர்களே இயல்புடைய மூவராதல் வேண்டும் என்றும் கூறுவர். - - - இஃது, உறுதியற்ற கற்பனையாகலின் பொருந்தா தென்க. மேலும் ஊர் மன்றத் தலைவர்கள் இல்லறத்தார்களாக இரார் என்பதற்கும் அடிப்படையில்லை. இனி, அவர்களுக்கும் இல்லறத்தானுக்கும் என்ன தொடர்பு?

எனவே, இவ்வுரையும் பொருந்தாவுரையே.

- இனி, சட்டவியல் பேரறிஞர் கா. சுப்பிரமணியனார் பரிமேலழகர் கூறிய வடசொல் வழக்குகளான பிரமசரியம், வானப்பிரத்தம், சந்நியாசம் என்பவற்றையே, முறையே கல்வி நிலை, மனைத் தவநிலை, துறவு நிலை ஆகிய மூன்று நிலையினரும் என்று தூய தமிழ்ப் பெயர்களான் கூறுவர். பரிமேலழகரது உரையின் பொருந்தாமையே இவருரைக்கும் பொருந்தும் என்க. - அடுத்து, நாமக்கல் பாவலர் இராமலிங்கனார், நண்பர், ஏழை, உறவினர் என்று கூறுவர். அவர்களும் பெரும்பாலும் இல்லறத்தாராகவும்