பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ - 2 -1 -இல்லறவியல் - 5

துணை வேண்டாதாராகவுமே இருப்பின், இக் கடமை தேவையின்றாகி விடுமாகலின், இதுவும் சரியான உரையன்று. - மற்று, புலவர் குழந்தை சேரர், சோழர், பாண்டியர் என்பார். பேரா வ.சுப. மாணிக்கனாரும் அதை வழிமொழிவர்.

- மூவர் என்பது மூவேந்தரைக் குறிக்கும் என்பது சரியன்று. மேலும் அஃது எக்காலத்திற்கும் எந்நாட்டவர்க்கும் பொருந்துவதன்று. அத்துடன், ஒர் அரசனாட்சியில் உள்ள ஓர் இல்லறத்தான் மற்ற இரண்டு அரசர்க்கும் துணையாக இருக்க வேண்டும் என்பது எவ்வாறு? எனவே, இவ்வுரையும் பொருந்தாவுரையே. -

- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரோ, துறவோர், ஒழுக்கத்து நீத்தார், அந்தணர் (அறவோர்) என்பர். இவர்களுள் பின்னிருவரும் ஒருவரே. (21), (3) ஆகிய குறள்களைக் காண்க. அதுவுமன்றி, இம் மூவரும் சிற்சிறு வேறுபாடுகள் தவிர ஏறத்தாழ ஒரே தரத்தினரே. எனவே இவ்வுரையும் முழுவதும் பொருந்துவதன்று. - இனி, முனைவர் சி. இலக்குவனாரோ, மாணவர், தொண்டர், அறிவர் என்பதும் பொருந்தாது. மாணவர் என்பவர் ஏறத்தாழ பரிமேலழகர் கூறும் பிரமசாரியே. தொண்டர் என்பவர் எந்தத் தகுதி நிலையும் நிலையாக உடையவரல்லர். அவரும் இல்லறத் தாராகவே இருக்கலாம். எத்தகு தொண்டர் என்பதினும் குழப்பம் நேரலாம். கட்சித் தொண்டரா, மதத் தொண்டரா, அறிவுத் தொண்டரா, அரசியல் தொண்டரா, அவ்வாறெல்லாம் இலராயின் வேறு எவர், எதற்கு இல்லறத்தான் அவர்க்குத் துணையிருக்க வேண்டும்? எதுவரை: என்ப வெல்லா வற்றுக்கும் விடையிறுத்தல் இயலாது; எனவே இதுவும் வாயுரையே வாய்மையுரையன்று? - மற்று, மு.கோவிந்தசாமி என்பார் இவர்கள் யாவரினும் வேறாகச் சைவர், வைணவர், வைதிகர் ஆகிய கடவுளர் மூவர் என்று எவ்வகைப் பொருத்தமுமின்றிக் கூறிக் குழப்புவர். -இனி, சிலர் அடுத்த குறளில் (42இல்) வரும் துறந்தார் துவ்வாதவர், இறந்தார் என்றும், இளைஞர்கள், பிற இல்லறத்தார், துறவிகள் என்றும், பெற்றோர், மனைவி, மக்கள் என்றும், தாய், தந்தை, மனைவி என்றும் பலவாறு கூறி மலைப்பும் சளைப்பும் ஊட்டுவர். - பாவாணர் அவர்களோ அவரைத் தமிழ அந்தணர், அரசர், வணிகர் என்பார். அரசரும், வணிகரும், இல்லறத் தாரேயாதலின் புரக்கப்பட வேண்டிய மூவருள் ஒருவர் என்பது பொருந்தாது. - - இனி இயல்புடைய மூவர் என்பார், உறவோரும் அறவோரும், இறைவோரும் (ஆட்சியரும்) ஆவர் என்பதே மிகவும் பொருத்தமும்,