பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

அ-அறத்துப்பால்-முன்னுரை


::'ஐந்திணை மருங்கின் அறம்பொருள் இன்பம் - சிலம்புநூற்கட்டுரை4

'அறம்பொருள் இன்பம் மூன்றினும்'

- - பெருங்: 4-7-140

'அறம்பொருள் இன்பம்

- குறள் 501

'அறனினும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்'

— குறள் 754

'ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை.இரண்டும் ஒருங்கு - குறள் 760 இவ்விடத்து, தமிழியல் உறுதிப்பொருள் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றினொடு வீடு' என்னும் ஒரு கோட்பாடு, ஆரியவியலும் வேதமதமும் தமிழகத்தில் நன்கு பரவி, சிவமத, திருமாலிய மதச் சிந்தனைகள் மேலோங்கி வளர்ந்து விரிந்திருந்த தேவார காலத்தில் அஃதாவது கி.பி. 7-ஆம் நூற்றாண்டில்தான் வளர்ச்சி பெற்று, வேரூன் றியிருத்தல் வேண்டும் - என்பதை நினைவில் இருத்துக

ஏனெனில் அக்காலத்திற்குப் பின்னர் எழுந்த நூல்களிற்றான் இவ்வீடு பற்றிய கோட்பாடு, பரவலாகக் காணப்பெறுகிறது. எனவே அஃது ஆரியவியல் தாக்கமே என்க. திருக்குறளிலும் பிற கழக நூல்களிலும் இஃதில்லையாகல் ஒன்றே அதனை உறுதிப்படுத்தும். -

அதன் பின்னர் வீடு குறிக்கப்பெற்றுள்ள சில நூல் வழக்குகள் வருமாறு:

அறம் பொருள் இன்பம் வீடு - தேவா : 575;5

அறம் பொருள் வீடின்பம் - தேவா; 6905;11

அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் நன்னெறி மேம்பட் டன நான்கு அன்றே.

- நாலாதிவ்யிர, 2764 அறம் முதல் நான்காய். நின்றனை

- திருவாய், 34.5