பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

அ - 2 -1-இல்லறவியல் - 5

தென்றிசை முதல்வன் என்றும் வழங்கி வந்தனர் TETLಗೆ.

இனி, தென்புலம் என்பது தென்பகுதிநிலம் என்றும், வடபுலம் என்பது வடபகுதி நிலம் என்றும் இலக்கியங்களில் பரவலாக வழங்குவதையும் காணலாம். தென்புலம் என்பது தென்பகுதி நிலமாயின் தென்புலத்தார் என்பவர் தென்பகுதி நிலத்தில் வாழ்பவர்

என்று இயல்பாகவே பொருள்படும் என்க.

மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுள்

". சிலப். என்று கூறிப் பாண்டியன் நெடுஞ்செழியன், கண்ணகிக்குச் செய்த

தவறு கூறி வீழ்ந்திறந்தான் என்றவிடத்துச் சிலப்பதிகாரத்தில்

பாண்டிய நாடு தென்புலம் என்று குறிக்கப் பெற்றிருப்பது காண்க அடுத்து, சிறுபாணாற்றுப் படையில், பாண்டியனும் சோழனும்

சேரனும், . . . - . " - 'தென்புலங் காவலர் மருமான் - என்றும்,

குணபுலங் காவலர் மருமான் - என்றும், 'குடபுலங் காவலர் மருமான் - என்றும்.

முறையே சுட்டப்பெறுதலும் காண்க

&: , மேலும், உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமியார், தம் பதிற்றுப்பத்து உரையுள்,

மகப்பேற்றினால் பிதிரர் கடன் கழியும் என்னும் வடவர்

கொள்கை தமிழ் நாட்டார்க்கு இல்லை. திருவள்ளுவர் மகப்பேறு

பிதிர்க்கடனிறுக்கும் வாயிலெனக் கூறாமையே இதற்குச் சான்ற

கரியாம் என்று கூறியிருப்பதையும் நோக்குக.

- இனி, தெற்கே உள்ள கடல் தென்கடல் என்றும், அங்குள்ள குமரி தென்குமரி என்றும், இன்னும், தென் கொற்கை முத்தொள். 943), தென்தமிழ் சிலப், தென்தமிழ்நாடு சிலப், தென் தமிழ்ப்பாவை சிலப், தென்தமிழ் மதுரை மணி, தென்திசைப் பொதியில், தென்புலம் குறுந்:

1317.7 அகம் 24-8; புறம் 35.7:388-1; சிலப். 10103:207), தென்புலமருங்கு

(மது 202 நெடுநல் 52, நற். 53.5 சிலப். 27.18), தென்வளி, தென்றல்

ப்ோலும் பலநூறு வழக்குகள் தென் என்னும் அடையெடுத்து

வழங்குதல் காண்க. - -- . ----- • . . . . . ...

2 தெய்வம் வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தெய்வச்

சான்றோர். கடவுளே, இறைவனோ அல்லர். இவ் வேறுபாட்டு