பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

174


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் 174

- தன்னைத் தலையென்றது. காட்சி, கேள்வி, உயிர்ப்பு, மொழி, அறிவு ஆகிய அனைத்துக் கூறுகளுக்கும் அடிப்படையாகிய தலைபோல் தான் இருந்து பேணி அறமாற்றுதல் வேண்டும் என்பதாகவும், . . . . . . . . . . . . . * , உருவகப் பொருள் கொள்ள வேண்டும் என்க.

– இம்மூன்று குறள்களாலும் இல்வாழ்வானுக்குரிய கடமையும், நோக்கமும், தேவையும் எடுத்துரைக்கப்பெற்றன என்க. Ꭴ.

சக பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை .

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல், 44

பொருள் 656 முறை

பழி அஞ்சிப் பாத்து ஊன் உடைத்து ஆயின் வாழ்க்கை வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்,

பொழிப்புரை : அறம் செய் வகையினும், பொருள் செய்வழியினும், இன்பம் நுகர் முறையினும், அவை தவறிய விடத்து வந்து சேரும் பழிகள் மேவாமல் அஞ்சிக் காத்து, நல்வழியில் தன் முயற்சியால் எய்திய பொருள் நலத்தை, முன்னர்க் கூறிய வழிமுறையினார்க்கும், ஏழையர்க்கும், இரங்கினார்க்கும், பகுத்துக் கொடுத்து உண்ணுகின்ற தகைமை உடையதாக இல்லற நடைமுறை இருப்பின், அவ்வாறு ஒழுகுவானுக்கு, வாழ்க்கை முழுமை பெற்று, மேலும் ஆற்ற வேண்டிய கடமையெச்சம் எந்நிலையிலும் இருப்பதில்லை. (அவனே நிறைவுற வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தவனாம் என்க.) '...' . . . . . . . . . . . . . . . . . . . . . ". . . . ،۰۰۰۰ -.. ، : -؟ . . ... مه

1 பழி பிறரால் பழிக்கப்படுதலின் பழியாயிற்று. பிறரால் பழிக்கப்படுதல் இழித்துரைக்கப்படுதல், அத்தகைய

3. பாத்தூண் - பகுத்து ജ്ഞ, பிறர்க்கும் தன் உணவைப் பகுத்துக்