பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

அ - 2 -1 இல்லறவியல் - 5

கொடுத்தல்; இனி, உணவு மட்டின்றி, தன் மிகையுடைமைகளையும் பகுத்துக் கொடுத்தல் மேலும் சிறப்பென்னும் குறிப்பும் உடைத்து என்னும் சொல்லால் புலப்படுதல் காண்க. - ஐம்புலத்தில் தானும் ஓர் ஒம்பற்கூறு ஆகையால் 'மிகையுடைமை எனக் கூற வேண்டுவதாயிற்று.

- பகுத்து பாத்து பகுக்கப்படுவது பாத்து பாத்தி என்னும்

சொல்லும் இதன்வழி என்க.செயல் பொருளின் மேல் நின்றது.

- இச் சொல்லை 4, 22 0 ஆகிய இடங்களிலும் இதே பொருளில் ஆளுதல் காண்க. வாழ்க்கை வழி எஞ்ச்ல் மேற்கொண்டு செய்தற்கு வாழ வேண்டிய கடமை எச்சமின்றி நிறைவாழ்க்கை குறைவாழ்க்கை அன்று. - வழியைப் பிறங்கடை என்றும், மரபுவழி என்றும் பொருள் கொள்ளுதல் பொருந்தாது. என்னை: அவரவர்க்கும் வாழ்க்கை தனித்தனி ஆகலான். ஒருவர் நிறைவு வாழ்க்கை அவர் வழி

வரும் பிறர்க்குப் பயன் நல்குதல் பெரும்பான்மையுமின்றி ஒரோவழியே நிகழுமாகலின் என்க.

இச் சடைவுக்கு விடையாகப் பாவாணர், இறைவனருளும் உலகோர் வாழ்த்தும் அவன் வழியை நீடிக்கச் செய்யும் என்பது

கருத்து என்ற்தும் முற்றும் அறிவியலுக்கும், மெய்யறிவியலுக்கும்

பொருந்தாதென்க -

எஞ்ஞான்றும் - எப்பொழுதும் எக்காலத்தும் ஞான்று . காலம்;

ஞாலுதல் தொங்குதல் எப்பொழுதும் இயங்கும்படி தடையிலாத

கால ஓட்டம்

நிறைவான வாழ்க்கை வாழுதலே இல்லறத்தாருடைய குறிக்கோளாக இருத்தல் வேண்டும் குறையுடைய வாழ்க்கை

சிறப்பன்று என்ப்து, கருத்து பகிர்ந்துண்ணுதல் மக்கள்

உயிர்வாழ்க்கையின் சிறப்பு என்பதும் அக்கருத்துக்கு வலிவும் பொலிவும் சேர்க்கும் என்க. м -> x.

Z இல்வாழ்க்கையின் பொதுவான உலகியல் நடைமுறைகளை

இந்நான்கு குறள்களாலும் கூறியவர், இனிச் சிறப்பான நடைமுறைகளைக் கூறத் தொடங்குவரர், Ꭴ.