பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

180


.திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் i80

பொழிப்புரை : இல்வாழ்க்கைக்கு உரிய இயல்பான நெறி முறைகளுடன் வாழ்பவன் எனப்பெறுபவன், துறவு பூண்டு வீட்டுப் பயன் காண முயற்சி செய்கின்றவர்கள் யாவருள்ளும் தலையான பயன் எய்துபவன்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்:

- இயற்கையான் அமைந்த இல்லற முறைப்படி இல்வாழ்க்கை நடத்துபவன் எனப் பெறுபவன்.

இயற்கையான் அமைந்த முறை என்பது, நல்லுடல், நல்மனம்,

நல்அறிவு, இவற்றுக்குப் பொருத்தமாய் அமைந்த மனைவி, அவளுடன் உடலாலும் மனத்தாலும் அறிவாலும் கொள்ளும் உறவு, இருவரிடத்தும் ஒருவரை ஒருவர் விரும்பும் மாறுபடாத உண்மையன்பு, இருவர்க்கும் உள்ள பொதுநிலை ஈடுபாடு - முதலியவற்றான் அமைந்தது.

2. முயல்வாருள் எல்லாம் - முயற்சி செய்கின்றவர்கள் எல்லாருள்ளும். -ஈண்டு முயற்சி என்பது, இல்லறத்திற்குப் புறனாய துறவற முயற்சி. பிற வாழ்வியல் முயற்சிகளை அன்று. - முயல்வாருள் எல்லாம் என்றது, அவ்வம் மதங்களுக்குரிய துறவற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் எல்லாருள்ளும் என்று உள்ளடக்கியது. வேறு வேறு மதங்களுக்கு வேறு வேறு துறவறக் கோட்பாடுகளும் ஒழுகலாறுகளும், புனைவு பூசல்களும், நோற்றல் ஆற்றல் முறைகளும் உண்டென்பது நோக்கி.

3. தலை - முதலாவது, சிறந்தது, உயர்ந்தது, மேலானது. இங்கு

உயர்திணைக்கு வந்தது.

4. முன்னைய குறளில் துறவற முயற்சியை இல்லறத்துடன் பொதுவாக வைத்துக் கூறியவர். இதில், ஒப்பிட்டு உயர்விது, சிறப்பிது என்று தெளியக் கூறினார். . Ꭴ.

ச.அ. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து. 48

பொருள் கோள் முறை : இயல்பு