பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i83 அ - 2 -1 -இல்லறவியல் - 5

சொல்லப் பெறுவதே இல்வாழ்க்கையைத்தான் குறிக்கும். இனி, அதுவும் பிறனது பழிப்புக்கு ஆளாகாமல் இருப்பின் மிகச் சிறந்த அறமாகும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை - 'அறம் என்பது பற்றி முன்னரே

விளக்கப் பெற்றது.

தமிழியல் முறைப்படி பொதுவாகவே அறம் என்று சொன்னால் அஃது இல்லறத்தை அஃதாவது இல்வாழ்க்கையைத்தான் குறிக்கும்

எனறாா.

ஏனெனில், ஒருவனுக்கோ ஒருத்திக்கோ, இயற்கையாகத் தன்னைப் பற்றிய நலன் உணர்வுகள் நிரம்பப்பெற்று, அதன் பின்னை அறத்துக்கு மூலமாகிய பொதுநலவுணர்வு தோன்றுவதன் அடிப்படையில் தான், அவனோ அவளோ தனக்காகி வரும் இன்னொரு துணையின் தேவையைப் பற்றிச் சிந்திக்கின்றனர். அந்நினைவு முதலில் உடலால் தொடங்கி, உள்ளத்தால் வளர்ந்து, அறிவால் முதிர்வுறுகிறது. அந்நிலையில், தான் என்னும் தனிநல உணர்வு, தாம் என்னும் பொதுநல வுணர்வின் வித்தாக உருவாகிறது. இங்கேயே அறவுணர்வு தொடங்கி விடுகிறது. தான் என மட்டும், நினையாமல், தாம் எனவும் நினைக்கத் தோன்றும் உணர்வுதான்

அறத்தின் முளை,

தொடக்கத்தில், அஃது எதிர்ப்பாலை இணைத்துக் கொண்டு, தாம்ாகிறது. பிறகு, அத் தாம் படிப்படியாக வளர்ந்து, தம் மக்கள், நட்பு, உற்றம், சுற்றம், ஊர், நாடு, உலகம் என வளர்ந்து நாம் ஆக நிறைவு பெறுகிறது என்பது உணர்வின் மெய்ம்மம் (தத்துவம்) ஆகும். எனவே, அறமாகிய பொது நல்வுணர்வுக்கு - பொதுமை உணர்வுக்கு - இல்லறமே உடலியல், உறவியல், அறிவியல் தொடக்கமும், முதல் முழுமையும் ஆவதால், 'அறன் எனப்பட்டதே

இல்வாழ்க்கை' என்றார் என்க. - -

என்னை? இல்லறமே அறத்தின் முதலும், அறவளர்ச்சிக்கு அடித்தளமும் ஆவதால், அதுவே முழுமையும் அறமாயிற் றென்க. - தன்னை விட்டுப் பிறிதோர் உயிரை இணைத்துச் சிந்திக்கும் முதல் இடம் இல்லறம். எனவே, அதுவே முதல் அறம், அவ்வகையில் ஒருவன் தனக்குற்ற அறத்தின் முதற்களமாகிய இல்வாழ்க்கையையே அடிப்படையாகக் கொண்டு, அதனையே நிறைவாக, முழுமையாக, எஞ்சுதல் இல்லாதவாறு, பிறன்பழிப்பதில்லாத முறையில், வையத்து வாழ்வாங்கு வாழ்வானானால், அதுவே முழுமையும் அறமாகி