பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

7



- துறவறவியலின்கண், அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடாவொழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய பதின்மூன்று அதிகாரங்களையும்,

- ஊழியலின் கண், ஊழ் என்னும் ஓரதிகாரத்தையும் பொருந்திய காரணத்தான் நிறை நிரலாக அடைவு செய்து, திண்ணிய பருவளவான் வகுத்துரைத்தார் என்க.

இவ்விவற்றின் காரணப் பொருத்தங்களையும் வகுமுறைகளையும் அவ்வவ்வதிகாரங்களின் தொடக்கத்தும் ஈற்றிலும் விளக்கிக் காட்டப் பெற்றுள்ளதிற் கண்டுகொள்க.

இனி, அறவுணர்வு என்னும் மாந்தத் திறவுணர்வை அறத்துப் பாலில் தொகுத்துக் காட்டினும், அவ்வுணர்வு அவ்வளவில் அடங்குவதன்று. அது வாழ்க்கை முழுதும் விரிந்து பரவி, ஆங்காங்குப் பொதுவொழுங் காகவும், மக்கள் நடைமுறையாகவும், ஒரளவு நேரடியாகவும் பேரளவு மறைமுகமாகவும் வலியுறுத்தப்பெறுகிறது. மேலும், இவ்வறவுணர்வு பொருட்பாலில் மட்டுமன்றி, இன்பத்துப் பாலிலும் ஊடுருவி நின்று, கணவன் மனைவியர்க்குள்ள ஒழுகியலாக மலர்ந்து சிறப்பதையும் ஆண்டுக் கண்டுகொள்க.

என்னை? அறவியலன்றி அரசியல் ஏது? ஆட்சியியல்தான் ஏது? அல்லது குடியியல்தான் அறவியலின்றி இயங்குமோ? என்க.

அவ்வாறே, இன்பியலும் அறவியலையே அடிப்படையாகக் கொண்டு இயங்குவதே என்பதை ஆங்காங்குக் கூறப்பெறும் விளக்கவுரைகளான் கண்டுகொள்க. -

இவ்வறநூலின்கண் அறவுணர்வு பல்வகையால் வலியுறுத்தப் பெறுகின்றதேனும், இஃதிஃது அறம் என்று வெளிப்படையாகச் சில அறக்கூறுகள் கூறப்பெறுவதையும் நாம் கவனித்தல் வேண்டும். அவற்றை இங்ங்ணம் ஒருவாறு தொகுத்துக் கூறலாம்:

அந்தண்மை உடையது அறம் – 30 உயிர்க்கு ஆக்கம் தருவது அறம் .31 سم வாழ்க்கைக்கு ஆக்கம் தருவதும் அறம் – 32 மனத்துக்கண் மாசில்லாதது அறம் - ~ 34 அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் – 35

பொன்றினும் பொன்றாத்துணை அறம் . ~ 36