பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

198




ருச! பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மை உண்டாகப் பெறின். 54

பொருள் கோள் முறை -

கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்,
பெண்ணின் பெருந்தக்க யா வுள.

பொழிப்புரை - (அவளுக்குக் கற்பு என்னும் மனத்திண்மை (மனவுறுதி) படிப்படியே உண்டாகி நிற்கப்பெறின், இல்வாழ்வானுக்குத் தன் மனைவியைவிடப் பெருமைப்படத்தக்கவை, அவன் பாங்கில் வேறு எவை உள்ளன? எதுவும் இல்லை என்க.

சில விளக்கக் குறிப்புகள் :

1. பெண்ணின் பெரும் தக்க யா உள - ஒருவனுக்குத் தன் மனைவியை விடப் பெருமைப் படத்தக்கது எது உள்ளது? ஒன்றுமில்லை என்றார். மனைவியின் ஒழுக்கம் ஆணுக்கு வலிவூட்டுவது ஆகையால், அவன் பெருமைப்படத் தக்கது வேறெதையும் விட இந்நிலையே என்றார்.

இங்கு, பெண் என்றது மனைவியை, பொதுவான ஒரு பெண்ணையன்று.

பெண். பொதுவான நிலையில் விரும்பப்படுபவள், விரும்புதற்குரியவள். சிறப்பான நிலையில் விரும்பப்பட்ட மனைவி.

'யா உள' என்பது உடைமைப் பொருளில் 'யாவை உள' என்று வராமல் பாங்குப் பொருளில் அஃதாவது உரிமைப் பொருளில் வந்தது என்க. உறவுப் பொருளில் எனினும் சிறக்கும்.

- ’பெண்ணின் பெரும் தக்க யா உள’ - என்பதற்குப் பெண்ணின் பெருமைப்படத்தக்கவையான சிறப்புத் தன்மைகள் வேற எங்கு உள என்றும் பொருள் கொண்டு, அவளிடம் இயற்கையாக அமைந்த கவரத்தகும் அழகிய உடலமைப்பு, அன்புணர்வு, மக்களை ஈன்று தரும் தாய்மை, அவர்களையும் கணவனையும் பேணிப் புரக்கும் பொறுமை, பொறுப்புடைமை, இல்லறச் சுமைகளைத் தாங்கிக்கொள்ளும் நோன்மையுடைமை, அனைவரையும் அரவணைக்கும் கனிவுடைமை, விருந்தினர்ப் பேணும் பண்புடைமை முதலிய அருங்குணங்களும் சிறப்புத்தன்மைகளும் வேறு எங்கும் எவரிடத்தும் இல்லை என்னும் விளக்கமும் கூறலாம் என்க. என்னை? இத்தகு சிறப்பியல்கள் உடைய பெருமைக்குரிய பெண்ணுக்குக் கற்பு என்னும்