பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 அ 2 -2 -வாழ்க்கைத் துணைநலம் - 6

தொழுது பின் படுக்கையினின்று எழுவள் என்பதே தெளிபொருள் என்க. 2. பெய்யெனப் பெய்யும் மழை பெய் என்று சொன்னவுடனேயே பெய்யும் மழை. - سینہ • - இத்தொடருக்குப் பெய்யென்று சொன்னவுடனேயே பெய்யும் மழையைப் போன்றவள் என்று புரட்சிப் பாவேந்தர் பொருள் கூறுவார். அது திருவள்ளுவர் கருத்தாகாது. ” 'விசென வீசும் காற்று, தோன்றெனத் தோன்றும் கதிர் - என்பன போன்றது பெய்யெனப் பெய்யும் மழை - என்பதும்.

- இதை இல்பொருள் உவமையாகக் கொண்டால்தான் "பெய்யெனப் பெய்யும் மழை போன்றவள் என்று பொருள் கொள்ளமுடியும். - பெய் என்று யார் சொன்னாலும் மழை பெய்யாது. அஃது இயற்கையன்று. இறும்பூது கற்பனை. அவ்வாறு பொருள் கொள்வதற்கும், அப்படி எங்காவது ஒரு நிகழச்சி நடந்திருத்தல் வேண்டும். அவ்வாறு நடந்ததாகத் தமிழ் இலக்கியங்களுள் எங்கும் காட்டப்பெறவில்லை.

- ஆனால், மணிமேகலையுள் வான்தரு கற்பு (மணி. 22:55, 'மழைதரும் இவள் மேற்படி : 63 என்று வருவதாகப் பாவாணர் எடுத்துக் காட்டிய அடிகளிலும், அவ்வாறு மழை தருதற்குரிய தன்மைதான் கூறப்பெற்றதே தவிர தந்ததிறம், காட்டப்பெறவில்லை. - எனவே, பழந்தமிழ்கத்தில், கற்புள்ள பெண் என்றால், அவள் கணவனைத் தெய்வமாக மதித்துத் தொழல் வேண்டும்; அத்தகைய கற்புள்ளவள் பெய் என்றால் மழை பெய்யும் என்னும் நம்பிக்கை இருந்துளது என்பதே இக் குறளடக்கிய பிற கூற்றுகளிலிருந்தும் தெரியவருகிற செய்தி ! - - இது மிகைப்படுத்தப் பெற்ற ஒரு தெய்வ நம்பிக்கையே தவிர, இயற்கைக்குப் பொருந்தியதாகக் கூற முடியாது. இஃதும் ஒரு வகையில் மூடநம்பிக்கையே. இம் மூடநம்பிக்கை நூலாசிரியர்க்கும் இருந்துள்ளது என்பதையே இக்குறள் காட்டும். அதற்காக அவரை அதனின்று மீட்கும் பொருட்டு, இத்தொடர்க்கு பெய்யெனப் பெய்யும் மழை போன்றவள் என்றெல்லாம் பொருளுரைப்பது தேவையின்று என்றறிக

- இது பெண்ணடிமை யாகாது. பெண்மையைத் தெய்வ நிலைக்கு உயர்த்துதற்குக் கொண்ட மூடநம்பிக்கையே அன்றி வேறன்று. நம்பிக்கை மிகையான மன உணர்வின்பாற்பட்டது; அறிவின்