பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 அ - 2 2 - வாழ்க்கைத் துணைநலம் - 6

தானருந்தும் நிலையினையும், குடும்பத்துப் பிறர் முன்னரே உண்டு முடித்து, இவளைப் பற்றிக் கவலைப்படாத நிலையினையும் கண்டு வருந்திய நிலையில், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் கணவன் வாராத நிலையில், தான் வீணே பசித்துக் கிடவாமல், தானும் தன் உடல் நலத்தைப் பேணிக் கொள்ளும் பொருட்டு, உணவருந்திக்கொள்ள வேண்டிய தேவையையும் உள்ளடக்கியே இத் தற்காத்து என்ற கருத்தைக் கூறினார் என்க.

- பிறர் நலத்தைக் கருதுவதிலேயே முழுக்கவனமும் முழு முயற்சியும் செய்யும் இல்லத்தலைவி, தன் நலத்தையும் முதற்கண் காத்துக் கொள்ளவேண்டும் என்றார். - இதில், மன நலமும் அறிவு நலமும் முதலியனவும்கூட அடங்கும் என்க. அந்நிலையில் அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும் கெஞ்சுவதுமாக ஓர் இல்லக் கிழத்தி அடங்கி ஒடுங்கி, வீட்டு மூலையிலேயே முடங்கிக் கிடக்காமல், தன் கல்வி ஈடுபாட்டை வளர்த்துக்கொள்ளும் அறிவு முயற்சிகளிலும், பிறர்பால் மனம்கொண்டு பேசி, மனவிறுக்கம் தணித்துக் கொள்கின்ற கலந்து பழகுதலிலும் ஈடுபட்டு மகிழ்ந்திருப்பதையும் கூட அடக்கிக் கூறலாம் என்க.

2. தற்கொண்டான் பேணி : தன்னை மனைவியாகக் கொண்ட

கணவனைப் பேணி.

-- அஃதாவது, தான் செலுத்தும் அதே போலும் அன்பாலும், அக்கறையாலும், ஈடுபாட்டாலும், நம்பிக்கையாலும், தன்னை ஒரு துணையாகக் கொண்டவனாகிய கணவனையும், தன்னைப்போல் பேணிப் புரந்து என்பதைத் தற்கொண்டான் என்னும் இணைச்சொல் ஆட்சியினால் நுண்ணிதின் விளக்கினார் என்க.

3. தகை சான்ற சொல் காத்து : தான் மணமாகி வந்து இல்லறம் மேற்கொண்டதிலிருந்து, முதுமையுற்று வாழ்க்கை நிறைவெய்துங் காலம் வரை, தன்னைப் பற்றியும், தன் கணவன், குடும்பத்தார் இவர்களைப் பற்றியும், உறவினரும், நண்பரும், சான்றோரும் மதிப்பிட்டுத் தகுதி கூறும் பெருமை பொருந்திய பாராட்டு மொழிகளுக்குத் தன்னால் ஏதமும் இழுக்கும் வாராமல் காத்து. ஏதம் குற்றம், இழுக்கு இழிவு. w - ஒரு குடும்பப் பெருமை குடும்பத்தலைவனாலும்

தலைவியாலும் அதன் உறுப்பினர்களாலும் மதிப்பிடப் பெறுவது உலகியல்