பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

அ - 2 2 - வாழ்க்கைத் துணைநலம் - 6

மிகுகற்பனை. உலகியல் துன்பநிறைவு தாளாத ஏக்கத்தான் வந்திருத்தல் வேண்டும் என்க. மற்றும், இதற்கான அறிவியல் சான்றோ மெய்யறிவியல் சான்றோ இன்றுவரை இல்லை. - இல்லற வழுத்தத்தில் பெண்டிர் படும் கடமைச் சுமைக்கு ஆறுதலளிக்க வேண்டும், அவர்கள் எவ்வாற்றானும் எந்நிலையிலும் கணவனை மதித்துப் போற்ற வேண்டும் என்னும் நோக்கத்துடன், ஆரியவியலின் கர்மாக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புனையப்பெற்ற கற்பனையாதல் வேண்டும்.

- மற்று, மனைவியைக் கணவன் விரும்பும் அதே அடிப்படையில்,

கணவனையும் மனைவி விரும்புதல் வேண்டும் என்னும் இல்லற

மனவியலையும் மதிப்பியலையும் கொண்டதாகும் இக்கருத்து என்க.

5. இதற்குப் பெண்டிர் பெருஞ்சிறப்புப் பெறின், அப்பெண்டிரை

மனைவியாகப் பெற்ற கணவரும் புத்தேளிர் உலகில் பெருஞ்சிறப்புப்

பெறுவார்கள்', என்று பொருள் தருவாரும் உளர். .

உழக்கில் கிழக்கு மேற்குப் பார்ப்பதுபோல், இப்பொருளில் வேறு புதுச்சிறப்பொன்றும் இல்லை என்க.

5. வேறு சிலர் இக்குறள் கருத்தைக் கணவர்மேல் சாற்றித், "தம்மைப் போல் நல்ல குணமும் செயலும் உடைய கணவரைப் பெறின், அத்தகைய பெண்கள் என்றும் புதிதாக மணந்து கொண்டதுபோல் இன்பமும் பெருஞ்சிறப்பும் பெறுவர் என்று உரை தருவது, வலிந்து பொருள் கொள்வதாகும் என்க.


நூலாசிரியர் இவ்வதிகாரத்துள் தரும் கருத்துகள் அனைத்தும் இல்வாழ்க்கைத் துணைவியாகிய மனைவிக்கு இருக்கவேண்டிய பெருமைப்பாடுகளையும், அவளுக்கு இருக்கக்கூடாத சிறுமைப்பாடு களையுமே என்க. அவர், இல்வாழ்வானுக்கிருக்க வேண்டிய பெருமைகளையும் இருக்கக்கூடாத சிறுமைகளையும் இதற்கு முன்னுள்ள இல்வாழ்க்கை அதிகாரத்திலேயே சுட்டியுள்ளதையும் ஒர்க,

. . - O

ருகு) புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை. 59

புகழ்புரிந்த இல் இலோர்க்கு இகழ்வார் முன் ஏறு போற் படு நடை இல்லை.