பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

212



சில விளக்கக் குறிப்புகள் :

1. மங்கலம்-மகிழ்வையும் நன்மையையும் தரும் பொருள் அல்லது செயல், 'மஞ்சள்' என்னும் சொல்லின்று வந்தது. மஞ்சள் நிறம் மகிழ்ச்சியும் நன்மையு தருவது என்று கருதினர்.

2. என்ப: என்று சொல்வர். சொல்பவர் சிறப்பு நோக்கி 'உணர்ந்தவர்கள்' என்பது வருவிக்கப்பெற்றது. 3. மனைமாட்சி : மனைவியினது மாண்பு, பெருமை மிகு நல்லகுணங்களும் செயல்களும்.

4. மற்றதன் மற்று அதன் ஈண்டு இர்டு சொற்களும் பொருள்தரக் கூடியவனவாகலின் பிறர் கூறியது போல் அசையில்லை.

5. நன்கலம் : நல்ல அணிகலன், அழகும் சிறப்பும் தருவது

6. நன்மைகள் பேறு : நல்ல மக்களைப் பெறுவது. ஈண்டு பெருமைக் குரியதாக நின்றது.

7. வாழ்க்கைத் துணைவியின் நன்மைகளைக் கூறியவர், இல்லறத்தின் அடுத்தக் கூறாகிய மக்களைக் கூறப்புகும் அடுத்த அதிகாரத்திற்கு எடுப்புக் கூறினார்.