பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

213

அ - 2 - 3 - மக்கட்பேறு - 7



அ-2. இல்லறவியல்
அ-2-3. மக்கட்பேறு - 7
அதிகார முன்னுரை

'அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை' என்றவர், அந்த இல்வாழ்க். கைக்குரிய துணையாகிய இல்லாளின் மாட்சியைச் சென்ற அதிகாரத்துள் கூறினார்.

அத்தகைய மனைமாட்சியின் பெருமைக்கும், சிறப்பிற்கும், மரபிற்கும், உலக நடப்பிற்கும், உயர்ந்ததாகிய மக்கள் பேற்றை இங்குக் கூறப் புகுந்தார் என்க.

மக்களைப் பெறுதல் மக்கட் பேறு ஆயிற்று.

இயற்கை மொழியாகிய முந்துதமிழ் மொழியின்கண் உள்ள பலவகையான சிறப்புச் சொற்களில் 'மக்கள்' என்னும் சொல்லும் ஒன்று.

தமிழில் மட்டுந்தான் மக்கள் என்னும் சொல், பெற்றோரின் பிள்ளைகளையும், பொதுமக்களையும் குறிக்கும் சிறப்புச் சொல்லாக வழங்குகிறது. பெற்றோர் பலரின் பிள்ளைகளே ஒரு குமுகமாக ஒரு மக்கள் கூட்டமாகப் - பெருகுவதை இவ்விருபொருள் ஒரு சொல் விளக்குவதாகக் கூறலாம்.

'மக்கட் செல்வம்' என்று செல்வத்திற்கிணையாக மக்களைக் குறிப்பிடுவதிலிருந்தே பெற்றோர் பெறும் டேறுகளில் சிறந்தது மக்கட் பேறு என்று விளங்கும். நூலாசிரியரும் இதை இவ்வதிகாரத்துள் உறுதிப்படுத்துவார்.

மக்கள் என்னும் சொல் எவ்விடத்தும் இருபாலையும் சேர்த்தே குறிக்கும். பால் வேறுபாட்டின் பன்மை குறிக்கப்பெறும் பொழுது, ஆண், பெண்