பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

216


"தேவர்கள். இருடிகள் (ரிஷிகள்), பிதுர்கள் இம் மூவர்க்கும் செலுத்தும் மூன்று கடனுடன், மனுஷன், யாகம் செய்வதால் தேவர்களுடைய கடனையும், வேதம் ஒதுவதால் இருடிகளுடைய கடனையும், புத்திரர்களைப் பெறுவதால் பிதுர்களுடைய கடனையும் தீர்க்க வேண்டும்". (மனு:6.3)

"யாகம் செய்யாமலும், வேதம் ஓதாமலும், புத்திரரைப் பெறாமலும் மோட்சத்தினையடைய முயற்சி செய்பவன் நாசமடைவான்". (மனு 6:7)

பெண்களை அறிவற்றவராகக் கருதுவதும். அவர்களை ஆண்களுக்கு அடிமை செய்யப் பிறந்தவர்களாகவே மதிப்பதும், ஆரியவியல் கோட்பாடுகளே யன்றித் தமிழியல் கோட்பாடோ, அதைக் கூற வந்த நூலாசிரியர் கோட்பாடோ அல்ல என்க.

- இனி, வாழ்க்கைத் துணை நலத்தின் ஒரு பகுதியாகிய, மனம், அறிவு, செயல் ஆகியவற்றின் நலன்கள் அவ்வதிகாரத்துள் கூறப் பெற்றுள்ளன.

அதன் மறுபகுதியாகிய, உடல் நலனில் ஒரு கூறு எனும் கருவுயிர்ப்புத் தகுதி நலன் இவ்வதிகாரத்திற்கு அடிப்படையாயிற்று. -

அஃது அகம் எனில், இஃது அகப்புறம் என்க.

O

சு.க. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற.
61

பொருள் கோள் முறை :

பெறும் அவற்றுள், அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற,
யாம் அறிவது இல்லை.

பொழிப்புரை: இல்வாழ்வை மேற்கொண்ட கணவனும், மனைவியும், தாங்கள் பெற வேண்டியனவாக முன் வாழ்ந்தவர்களால் கூறப் பெறும் பலவகை ஆக்கங்களுள், அறிவை அறியத் தகும் உணர்வுள்ள மக்களைப் பெறுவது தவிர வேறு ஆக்கம், யாம் அறிந்த வரையில் எதுவும் இல்லை.

சில விளக்கக் குறிப்புகள்

1. பெறுமவற்றுள்: இல் வாழ்க்கை மேற்கொண்டவர்கள் பெற வேண்டியனவாக முற்கூறப்பெற்ற ஆக்கங்களுள்.

- அவையாவன: அழகு அறிவு, ஆற்றல், இளமை, நுகர்ச்சி, கல்வி,