பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

அ - 2 - 3 - மக்கட்பேறு - 7

2.

புகழ், நோயின்மை, துணிவு, நெல், பொன், வெற்றி, பெருமை, நன் மக்கள், நல்லூழ், வாழ்நாள் ஆகிய பதினாறு என்ப. இவற்றுடன் அறவியலும் வாழ்வியலும் வளர்ந்துள்ள இன்றைய நிலையில், தன்மானம், உரிமை, தொண்டுணர்வு முதலியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்; அவையும் இயல்பாகவே பெற்றிருக்க வேண்டிய நல்லுணர்வுகள் ஆதலின். அறிவு அறிந்த மக்கட் பேறு : அறிவை அறியத்தகும் உணர்வுள்ள மக்களைப் பெறுவது. . 'அறிவு கருமியம் (காரியம்); அறியத்தகும் உணர்வு கரணியம் (காரணம் அறிவைப் பெறுவது பிறப்பின் பின்னர்; ஆனால் அதற்குப் பிறவியிலேயே அறிவை அறிந்து கொள்ளும் உணர்வை ஒருவர் பெற்றிருத்தல் வேண்டும். அவ்வுணர்வைப் பிறவியிலேயே ஒருவர் பெற்றிருப்பதற்குப் பெற்றோரே கரணியமாவர் என்பது மனவியல், உணர்வியல், உடலியல் அடிப்படையான உண்மையாகும். என்னை? பெற்றோர், தாம் ஒன்றிணையுங் காலத்து, வெறும் உடலுணர்வினராக மட்டுமிராது, உரத்த அறிவுணர்வினராகவும் இருத்தல் வேண்டும் என்பது அறியப்பெற்றுள்ளது. மேலும், குழந்தை கருவுயிர்ப்பின் பொழுதும், கருவிலுள்ள பொழுதும், தாயின் உடல் நலத்தையும் மன நலத்தையும் அறிவு நலத்தையுமே கொண்டு வளர வேண்டுமாகலின், அக்கால் அதனைப் பெற்றெடுக்கப் போகும் அன்னைமார், அதற்குரிய வகையில் உடல் ஊட்டமும், மனவூட்டமும், அறிவூட்டமும் பெறும் வகையில் உண்பதும், நல்லனவற்றைச் சிந்திப்பதும், அறிவை உணர்வதுமாக இயங்குதல் வேண்டும் என்பது இயற்கையும் இற்றை அறிவியலும் ஆகும் என்க.

அந்த வகையில் அறிவறியும் உணர்வுள்ள ஏன் இன்னும் சற்று முன்னுணர்வுடனும் முன்னறிவுடனும் முயன்றால், அறிவறிந்த மக்களையே பெற்றெடுத்தலும் இயலும் என்பது உயிர் நூலார் துணிபு

铲6莓ö。 -

எனவே, அறிவற்ற அறிவுணர்வற்ற மக்களைப் பெறுவதிலும், அறிவுணர்வுள்ள, அறிவறியும் திறனுள்ள மக்களைப் பெற்றெடுப்பதையே பெற்றோர் கடமையாகக் கொள்ளுதல் வேண்டும் என்றார். நல்ல பயிர் விளைவுக்கு நல்ல நிலமும் எருவும், நீரும் கவனிப்பும் காப்பும், முன் திட்டமும் எவ்வளவு இன்றியமையாதனவோ, அவ்வளவு இன்றியமையாதன தேவை நல்ல

உயிர் விளைவுக்கும் என்க.