பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

220


1.இ எழு பிறவி, எழு பிறப்பு என்பதை உரையாசிரியர்கள் பலரும் இருவகையாகப் பொருள் கொண்டு கூறுகின்றனர்.

- சிலர் எழு பிறப்பு, எழு பிறவி என்பதை ஏழு மக்கள் பிறப்பு என்றும், சிலர், நிலைத்திணை (தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, விலங்குகள், மாந்தர், தேவர் என்று ஏழுவகைப் பிறப்புகள் என்றும் மாறுபடக் கூறுகின்றனர்.

-நூலாசிரியரைப் பொறுத்தவரை, எழுபிறப்பு, எழுமை, எழுமை எழு பிறப்பு என மவகையாகப் பிறவிகளைக் குறிக்கின்றார். இவை நூலுள் 52, 10% 126, 396, 538, 335, என்னும் ஆறு குறட்பாக்களில் மட்டுமே குறிக்கப் பெறுகின்றன. -

அவற்றுள் 126, 398, 638, 855 - ஆகிய நான்கு இடங்களில் எழுமை என்றும்.

ஓரிடத்தில், 62இல், எழுபிறப்பு என்றும், மற்றோர் இடமான 107இல், எழுமை எழு பிறப்பு என்றும் கையாள்கிறார்.

இவற்றுள் 'ஏழ்' என்றோ, 'ஏழு' என்றோ எங்கும் குறிப்பிட்டிலர்,

- எனவே, 'எழுமை' என்பதோ, 'எழு பிறப்பு' என்பதோ, 'ஏழு' என்ற எண்ணைக் குறிக்கவில்லை என்பதைப் பொதுவாக உணரலாம்.

இனி, 'எழுமை எழுபிறப்பு' என 107 - இல் இரண்டு சொற்களையும் இணைத்துக் குறிப்பதால், எழுமை என்பதோ, எழு என்பதோ, ஏழு என்னும் எண்ணைக் குறிக்கவில்லை என்பதைத் திண்ணமாக உணர்ந்து கொள்ளலாம். என்னை? இவ்விரு சொற்களுள் ஒன்று ஏழு என்னும் எண்ணைக் குறித்ததாக இருப்பின், மற்றொன்று வேறு பொருள் குறித்ததாதல் வேண்டும். இரண்டு சொற்களும் ஏழு என்னும் எண்ணைக் குறித்தனவாக ஒரே விடத்தில் அவர் பயன்படுத்தியிருத்தல் இயலாது.

எனவே, இரண்டு சொற்களுமோ, அல்லது இரண்டுள் ஒன்றோ, ஏழு என்னும் எண்ணைக் குறிக்கவில்லை என்பது தெளிவாகியது. ஆகவே, இவ்விரு சொற்களுமே பிற ஐந்து இடங்களிலும் தனித்தனியாக வருவதால், அவ்விடங்களிலும் அவை 'ஏழு' என்னும் எண்ணைக் குறித்தனவாகக் கொள்ள முடியாது.

அவ்வாறு முடியாது போகவே, இவ்விரு சொற்களுக்கும், எழு பிறவி, என்றோ, ஏழு வகைப் பிறவி என்றோ, பரிமேலழகர் முதல் பாவாணர் ஈறாகப் பெரும்பாலான உரையாசிரியர்களும் பொருள் கண்டதும், கொண்டதும் பிழை என்று ஆகிறது.

இவர்களுள், பாவாணர் மட்டும் 'ஏழு' என்று பொருள் கொண்டதுடன்,