பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

226


விளையாட்டு, வேட்டம் முதலியன) தசகுணம், தசகூலி, தசகிரீவன், தசகண்டன், தசமுகன், தசசீலம், தசதானம், தசதிக்கு (எண்டிசை, மேல், கீழ் தசநாடி, தசபாரம், தசப் பொருத்தம், தசமூலம், தசபிரஜாபதி, தசமூலம், தசமொழி, தசரா பத்து இரவு தசவருக்கம், தசாவதாரம், தசவாயு, தசாங்கம், தசாங்கிசம் முதலியன. (தச - பத்து )

- இவற்றின் பொருள் விரிவும் ஒரு வகை விளக்கமும் எம் நிறைவுரையிற்

1ஓ இவ்வாறு இரண்டு முதல் பத்து வரை எண் தொகையான் அடக்கிக் கூறும் வழக்கு தமிழியலிலும், ஆரிய வியலிலும் தொன்று தொட்டே இருந்ததாகத் தெரிகிறது.

ஆனால் அவற்றுள் ஏழு பத்து என்னும் இரண்டு எண்களையும் பல, பற்பல, அடுத்தடுத்து, அடிக்கடி என்னும் பொருள்களில் பயன்படுத்துதல், நூல் வழக்கில் அருகியும், பேச்சு வழக்கில் பெருகியும் காணப்படுதலை

அவை, 'ஏழு தடவை நடந்தான்', 'ஏழுமுறை கேட்டான்', 'ஏழேழு தலைமுறைக்கும் அவனுறவு வேண்டேன் என்பனவும்,

'பத்து நடை போட்டான்', 'பத்துப் பேர் சொல்லட்டும் எனக்கெனப் பத்துப் பேர் இல்லாமலா போயினர் என்பனவும் காண்க

இனி திருக்குறளிலேயே எழுது என்பது மிகப் பல என்னும் பொருளில் 639 - இல் ஆளப்பெற்றிருப்பதையும் காண்க

1.ஒ இவ்வழக்கியல்களின் அடிப்படையில் அத்தகைய ஒர் உண்மை இருப்பதை நாம் காணல் வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவில் எண் தொகை வழக்குகள் ஈண்டுக் காட்டப்பெற்றன.

- ஆயினும் இந்நூலுள் பயன்படத்தப் பெற்றுள்ள ஆறு இடங்களில் வரும், எழுமை, (125, 395, 538, 835) எழு பிறப்பு (62), எழுமை எழு பிறப்பு (107) ஆகிய மூன்று சொல்லாட்சிகளையும், நூலாசிரியர் மூவகைப் பொருளில் ஆண்டிருப்பது உய்த்துணரற்பாலது.

- பண்டைத் தமிழியலில் பல் பிறவிக் கொள்கை காணப்பெறுகின்றதே தவிர, ஏழ் பிறவிக் கொள்கைஎன்னும் எண் கூட்டிய கொள்கை எங்கும் இருப்பதாகப் புலப்படவில்லை.

-இக் கொள்கை ஆரியவியலில்தான் பரவலாகக் காணப்பெறுகிறது. எனவே, ஆரியவியலைக் கண்டிக்க வந்தவரும், அதனைக் கண்டிப்பதுடன், அது பரவுவதைத் தடுத்து நிறுத்தவும் அதற்கிடையில் நம் தொன்றுதொட்டு வந்து கொண்டிருந்ததும், அற்றைத் தமிழகத்து நேரத் தொடங்கிய ஆரியப் பரவலால், சிற்சிறிதாய்ப் புறக்கணிப்புக்