பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

231

அ - 2 - 3 - மக்கட்பேறு - 6




பொழிப்புரை: (இவ்வுலகில் தம்முடைய பொருள் என்று உரிமை கொண்டாடுவதற்கு உரியவர்கள் தாம் பெற்று உருவாக்கிய தம் மக்களே. மற்று, அவரவரும் (உடைமை நிலையில்) தம்தம் பொருள் என்று கூறிக்கொள்வன, அவரவர் உழைப்பால் ஈட்டி வருவனவே - என்று (உரிமையையும், உடைமையையும் பிரித்து உணர்ந்தவர் கூறுவர்.

சில விளக்கக் குறிப்புகள்:

I. இக் குறள், உரிமைக்கும் உடைமைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்க வந்தது. உரிமை என்பது உயிரும், உடலும் ஆகிய இரண்டு தொடர்பு உடையது; உடைமை என்பது உடல் (உழைப்பு தொடர்பு மட்டுமே உடையது.

- மக்கள், பெற்றோரின் சொத்துக்கு எந்த வகையில் உரியவர்கள் என்பதற்கும், மக்களின் உழைப்பீட்டம் எந்த வகையில் பெற்றோர்க்குச் சொந்தமானது என்பதற்கும் எல்லை கூறி, உரிமை, உடைமை என்னும் இரு சொற்களுக்கும் அரிய விளக்கம் கூறுகிறார், இதில்.

2 தம் பொருள் என்ப தம் மக்கள்: உலகில் தம்முடைய பொருள் என்று உரிமை கொண்டாடுதற்கு உரியவர்கள் தாம் படைத்து உருவாக்கிய தம் பிள்ளைகளே.

என்னை? எம் மக்கள், எம் மகன், எம் மகள் என்று உரிமை கொண்டாடுவதற்கு உரிய பொருள்களாக இவ்வுலகில், ஒருவர்க்கு இருப்போர் அவர் பிள்ளைகளே. இது தாய், தந்தை இருவர்க்குமே பொது என்பதால் 'தம்' என்றார்.

- மற்று, என் மனைவி, என் கணவன், என் அண்ணன், என் தம்பி, என் அக்கை, என் தங்கை என்னும் உடல் தொடர்பு உறவு நிலை கூட அவரவர் அதைக் கொண்டாடி ஏற்கும் வரையில்தான். உரிமையும்கூட அது வரையில்தான்.

- மனைவி, கணவற்கும்; உடன் பிறப்புகளுக்கும் உள்ள உறவுணர்வு முறியுமானால், அவ்வுரிமை கொண்டாடப்பெறுவது இல்லையாகி விடும். உரிமையிழப்பு ஏற்பட்டுவிடும்.

- மனைவி இன்னொருவன் மனைவியாகவும், கணவன் இன் னொருத்தி கணவனாகவும் ஆக முடிகின்ற பொழுது, அம் மனைவி கணவன் உரிமையை இருவருமே இழக்கின்றனர். வேண்டுமானால் ஒரு காலத்து உறவைக்கூட மீண்டும் நினைவு கொள்ளலாம்.