பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

233

அ - 2 - 3 - மக்கட்பேறு - 7

- தந்தை, தாயரது உடலுழைப்பால் வந்தது, பிள்ளைகளுக்கும், பிள்ளைகளது உடலுழைப்பால் வந்தது தந்தை, தாயருக்கும்கூட, அவர்கள் அவற்றை மற்றவரின் துய்ப்புக்கு உரிமையாக்கினால் தவிர உடைமையாகா என்பதும் இதில் உணர்த்தப்பட்டது.

-உரிமை மாற்றத்தாலன்றிப் பெற்றோர் பொருளைத் தங்கள் பொருள் என்று பிள்ளைகளும் கூறார். அந்நிலையில் அது தந்தை பொருள், தாயர் பொருள் என்றே உடைமை வைத்துக் கூறப்பெறும் என்க.

4. இப்பாட்டு, பெற்றோர்க்கும் மக்கட்கும் உள்ள உரிமைத் தொடர்பும்

உடைமைத் தொடர்பும் பற்றி விளக்க வந்தது, என்க.

O

கச ::குழலினிது யாழினிது எண்பதம் மக்கள்

மழலைச்சொல் கேள தவர்.
64

பொருள் கோள் முறை :

தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்
குழலினிது யாழினிது என்ப.

பொழிப்புரை : தங்களின் குழந்தைகள் குழறும் மழலைச் சொற்களை (விருப்பமுடன்) கேட்டுச் சுவைத்து மகிழாதவர்கள்தாம், பிறர் பயிலுகின்ற குழல் இசையையும், மிழற்றுகின்ற யாழிசையையும், இனிது இனிது என்று கூறிச் சுவைத்து மகிழ்வார்கள்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. பரிமேலழகர் மற்றும் பலரது முறை வைப்பில் 66 ஆம் குறளாகக் கொள்ளப் பெற்ற இது, இவ்வதிகாரத்தின்கண் கூறப்பெறும், குழந்தையின் வளர்ச்சிக் கூறுகளை நோக்கி, 64ஆவதாக, முறை கொள்ளப் பெற்றது.

அவற்றுள் இது குழந்தையின் மழலை நிலை சுட்டியது. ஆகலின். மக்கள் என்பது பாலும் பருவமும் சுட்டாப் பொதுச் சொல். ஆயினும் இங்கு மக்கள் குழந்தைகளை என்றது.

2. தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்: