பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

234


தம் தம்முடைய குழந்தைகள் பால்வாயிற் குழறும் சொற்குழைந்த மழலை ஒலிகளை துண்ணிதாக, பாச விருப்புடன் கேட்டுச் சுவைத்து மகிழாதவர்கள்.

-பிறரின் குழந்தைகளது மழலை மிழற்றுதல் பலர்க்குப் பாச மகிழ்வு தராததும் உலகியல்பு ஆகையான், தம் மக்கள் என்றார்.

- மழலை திருந்தாச் சொல் - குழைந்து வரும் சொற்கள். - குழந்தையின் மழலையில் தம் தம் கேட்டல் உணர்வுக் கேற்ப, சொல்லும் அறியப்பெறுமாதலால், மழலைச் சொல் என்றார்.

கேளாதவர் என்று மழலைக்கும், குழல், யாழிசைக்கும் பொதுப் படக் கூறினாரேனும், ஈண்டு, மழலைச் சொல்லுக்கே நெருக்க வைத்துக் கூறியதால், மழலைச் சொல்லைப் பாச விருப்புடன் காதால் கேட்டு, மனத்தால் சுவைத்து, உணர்வால் மகிழாதவர்கள் என்று நுகர்ச்சிப் பொருளையும், குழலிசைக்கும், யாழிசைக்கும் எட்ட வைத்துக் கூறியதால், தொலை நின்று அவற்றைக் கேட்டுப் புலனுணர்வால் நுகர்ந்து துய்ப்புப் பொருளையும், பிரித்து, உணர்த்தினார் என்க.

- குழலையும் யாழையும் கூறியது, அவற்றைப் பெரும்பாலும் இசைப்பாரை நோக்கி, ஆண் மகவையும், பெண் மகவையும் குறிப்பால் சுட்டிற்றென்க.

3. இப்பாடல் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் குதலை யொழுகு மழலை மொழியான் பெறும் செவியின்பத் துய்ப்பைக் கூறியது. இதனுள் காட்சியின்பமும் அடங்கியுள்ளது என்க. O

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
65

பொருள் கோள் முறை:

தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்,
அமிழ்தினும் ஆற்ற இனிதே.