பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

238


செவிக்கு இன்பம் என்றது கேட்டல் பொறி முழுமையும் இன்பவுணர்வால் நிறைவுறுவது. இப் பாடலால், மக்களின் இளந்தை நிலை இளமைக்கு முன் நிலை யால் பெற்றோர்க்கு விளையும் இன்பம் கூறப்பெற்றது. - இம் மூன்று பாடல்கள்ாலும் குழந்தைகளால் பெற்றோர்க்கு விளையும் உள. மகிழ்வும் உடல் மகிழ்வும் கூறப்பட்டன.

0

::தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.
67

பொருள் கோள் முறை இயல்பு

பொழிப்புரை தந்தை தன் மகனுக்குச் செய்யும் நன்மையாவது, கற்றோர் நிறைந்த முன்னிலையில் இருக்கும்படி, கல்வியிற் சிறந்தவனாகச் செய்வது.

பிற விளக்கக் குறிப்புகள்:

நூலாசிரியர் காலத்திருந்த சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே என்ற நடைமுறைப்படி, மகனைக் கல்வியில் சிறந்தவனாகச் செய்வது என்று கூறினும், இக்காலத்துக் கல்வி அனைவர்க்கும் பொதுவாதல் பற்றி, மக்களை அவையத்து முந்தியிருப்பச் செய்வது என்று பொருள் கொள்ளினும் தக்கதாம். அதுபற்றித் தந்தை மக்கட் காற்றும் நன்றி என்று வரினும் பிழையன்றாம், தொடை நயம் கருதி, தந்தை மகர்க் காற்றும் என்று கொண்டு, மகர் என்பதை மகார் என்பதன் குறுக்கமாகக் கொள்ளினும் பொருந்துவதே (அவன், அவள், அவர் - என வருதல் போல்)

2. மகற்கு ஆற்றும் மகனுக்கு ஆற்றும் ஆற்றுதல் - தந்நலமின்றிச் செய்யும் கடமை.

3. நன்றி - நன்று பயக்கும் செயல்.

4. அவையம் - கற்றோர் கூட்டம்; அவை, மன்று என்பன ஓரிடத்து அடங்கிய கூட்டம் என்றாகும். கற்றோர் கூட்டம் என்பது, கற்றோர்க் கிடையில் முந்தியிருப்பது என்றாதலின், அதுவே சிறப்பாம்.