பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

அ-அறத்துப்பால்-முன்னுரை


物 - அ - அறத்துப்பால் - முன்னுரை என்று கூறுவது பொதுமையறம் நோக்கிய கூற்றே யன்றோ?

இனி, இவ்வாறே நூல் நெடுகலும் அவர் கூறிச்செல்லும் அறவியல் கூற்றுகளும், பிற ஒழுகியலாறுகளுமான அறவியல் உணர்வு என்பது, மக்களின் பொதுமை நலம் கருதும் ஒரு மீமிசை மாந்த உணர்வே யாகும் என்பதை எவரும் மறுத்தற்கியலாது என்க.

அவ்வாறான பொதுமையுணர்வே, பொதுவுடைமை உணர்வாகப் பலவிடங்களிலும் சிறப்பித்துச் சொல்லப்பெறும் கூற்றுகள், தமிழ் இலக்கியப் பரப்புகள் திருக்குறளில் மட்டுமே உண்டு என்று தமிழர் அனைவரும் பெருமைப்பட்டுக் கொள்வதில் தவறில்லை என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறலாம் என்க.

O