பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

248


கொண்டுள்ளது; இல்லெனில் இவ்வுயிரானது, இவ்வுடலை விட்டு நீங்கி விடும் - என்பது.

- உலகியலில் அன்பால் தவிர்க்கப்பெற்றார் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுதலும், இது.

- இவ்விரு கருத்துகளும் இதன் பொதுவான உலகியல் கருத்துகளாம்.

- இனி, சிறப்பானதும் தலையாயதுமாகிய உயிரியல் கருத்து ஒன்றும் இக்கூற்றுக்கு உண்டு.

அஃது, அன்பு செய்தல் எல்லா உயிரினங்களிலும் தொடர்ந்து இவ்வுலகில் நடந்து கொண்டிருப்பதால்தான் உயிர்கள் நிலை கொண்டுள்ளன என்பது.

- முன்னவை உடலியங்கள் கருத்தும், பின்னது உயிரியங்கல் கருத்துமாம் என்றுணர்க.

2. அஃதிலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த: அன்பில்லாதவர்க்குள்ள உடம்புகள் வெறும் எலும்பு மேல் தோல் போர்த்தன எனும்படி உயிரற்றனவாகும். -

- அன்பில்லாத உடல் உயிரில்லாத உடம்பு என்றார். எனவே, அன்பு உயிர் போன்றது; உயிரில் கலந்த உணர்வு அது. அஃது உயிரியக்கத்திற்குத் தேவை என்றார். அன்பில்லாதவர் உலகில் இயங்குவது மிகவும் கடினம் என்பதை உணர்த்தினார்.

3. இஃது, இல்லற வியலில் கூறப் பெற்றது. இல்லற வாழ்க்கைக்கு அஃது இன்றியமையாதது என்பதையும், அஃதின்றி, இல்லறம் இயங்காது என்பதையும் சிறப்பாக உணர்த்தவும், இல்லறம் மட்டுமன்றிப் பொது வாழ்வுக்கும் அதன் தேவையைப் பொதுவாக வலியுறுத்தவும் என்க.

- உயிர் வாழ்க்கைக்கு அன்பு அடிப்படையாது என்பதால், இக்கருத்து இவ்வதிகாரத்து முதலாவதாக வைக்கப்பெற்றது.

எஉ அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு . 72

வருள்கன் முறை:

ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு ::அன்போடு இயைந்த வழக்கு என்ப.