பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

253

அ - 2 - 4 அன்புடைமை - 8


அமைந்திருந்தாலும்

-எவன் செய்யும்: அவை என்ன பயனைத் தனக்கும் பிறர்க்கும் செய்துவிட முடியும்? ஒரு பயனையும் செய்துவிட முடியாது என்க.

- பரிமேலழகரும் பாவாணர் முதலியோரும் அகத்துறுப்பு அன்பு என்பதற்கு இல்லறத்தின் உறுப்பாகிய அன்பு என்று பொருள் கொண்டது போலவே, புறத்துறுப்பு என்பதற்கு இல்லறத்தின் புறத்துறுப்பாகிய இடமும் பொருளும் ஏவலும் முதலாயின என்றும் இயல்வழிப் பொருள் கொண்டதும் பொருந்தாதென்க.

இக்குறளுக்குப் பரிமேலழகர் கூறும் பொருளை அடியொற்றிச் சிவப்பிரகாசரும், "இல்லானுக் கன்பிங் இடம் பொருள் ஏவல் மற்று எல்லாம் இருந்துமவற் கென்செய்யும்” என்று நன்னெறி செய்ததும், பாவாணர் கூற்றுக்கும் அடிப்படையாயிருந்த தென்க

என்னை? இவர்கள் கூறும் இல்லறத்தின் புறத்துறுப்புகளாகிய இடம், பொருள், ஏவல் முதலியன இல்லறத்தில் ஈடுபட்ட அனைவர்க்குமே பொருந்தா வாகையினாலும், முன்னைய குறளில் உயிரின் உலகியல் தொடர்பை யாக்கையொடு இணை வைத்துக் கூறியதற்கு, விளக்கமாக இதில் நுட்பங் கூறியிருப்பதாலும், இங்குக் கூறப்பெற்றதும், இல்லறத்தில் உள்ளவர்தம் புறத்துறுப்பே ஆகலானும், அவர் பொருளாகிய இடம், பொருள், ஏவல் என்பது பொருந்தாவென்க. தேவையெனின், எல்லாம் என்றதால், அதையும் துணைப் பொருளாக்கி நயப்படுத்துவதிலும் தவறில்லை எனலாம்.

- மேலும், இல்லறத்துத் தலை உறுப்பிபனர்களாகிய தலைவனும் தலைவியும் தாங்கள் ஒருங்கிணைவதற்கே அடிப்படைக் கரணியமாகத் தங்கள் உடலுறுப்பழகையும், அவை பழுதில்லாமல் நன்கமைந்த தன்மையினையுமே கருத்தில் கொள்வார்களாகையான், அவற்றால் பெரும் பயனின்மை கூறியும், இல்லறத்திற்கு வேண்டுவது அகத்துறுப்பாகிய அன்பே யன்றிப் புறத்துறுப்புகளின் அழகும் அமைவும் அல்ல என்று நுட்பங் கூறியும், அவர்தம் இயல்பான நோக்கைக் கண்டித்தது ஆகும், இது.

3. இது, முன்னைய குறளுக்கு முழு விளக்கமாகவும் நுட்பமாகவும் அமைந்ததால், அதன் பின்னர், வைக்கப்பெற்றது. இதனை, இன்னொரு வகையானும் அடுத்து வரும் குறளில் மேலும் விளக்குவார்.