பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255 அ - 2 - 4 - அன்புடைமை - 8

அறிவுணர்வு மலர்ச்சியுற்று மேம்படுவதை, ஒருமைக்கண் தான்கற்ற கல்வி (398) நுண்ணிய நூல் பல கற்பினும் (373) - என்னும் குறள்களானும்,

பண்புணர்வு தொடரும் என்பதை 'ஒருமையுள் ஆமைபோல் (126) 'சிறுமையுள் நீங்கிய இன்சொல்'98) 'மனநலத்தின் ஆகும் மறுமை (459) 'மனையாளை அஞ்சும் மறுமையிலாளன் (904) - என்னும் குறள்களானும்,

அன்புணர்வு (காதலுணர்வும் தொடரும் என்பதை, இம்மைப் பிறப்பில் பிரியலம் (131) - என்னும் குறளானும்,

நட்புணர்வும் பிறவிதொறும் தொடரும் என்பதை, எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் (107) - என்னும் குறளானும்,

தீயவுணர்வுகளும் உயிர்க்கு இயல்பான குணங்களாய்த் தொடரும் என்பதை, புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் 538) ஒருமைச் செயலாற்றும் பேதை (835) - என்னும் குறள்களானும், இன்னும் பலவாறும் புலப்படுத்தி யுள்ளதை ஆங்காங்குக் கண்டு உணர்க. -

எனவே, அன்புணர்வு உயிர்களிடத்தில் இயல்பாவே உள்ளது. ஆனால், அது மேலும் மேலும் மலர்ச்சியுற்று விரிவடைந்து அருள் என்னும் வேறுபாடற்ற சமநிலைக்கு வருதலின் முயற்சியே வாழ்க்கை என்பது மெய்ந்நூலார் கொள்கை ஆசிரியரும்,

அருளென்னும் அன்பின் குழவி (75) - என்னும் குறளில் அதை உணர்த்தினார். -- -

இனி, இது ചോചി வாழ்க்கையில், உயிரின் பிற ಟ್ಲಿ மலர்ச்சியும் வளர்ச்சியும் பெற்று உயிர் ஒளி

புறுதல் வேண்டும் என்பது உயிரியங்கியல் கொள்கை என்க.

உயிர்க்கு ஒளி பெருகுதலை, நூலாசிரியர்,