பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

257

4 - 2 - அன்புடைமை - 8




4. இஃது, இல்லறத்துள்ளவர்களுள் ஒருவர்க்கு அன்பிருந்து மற்றவர்க்கு அன்பில்லாமல் இருப்பினும், அவ்விருவர் வாழ்விலுமே, உயிர் மலர்ச்சி தோன்றலும் வளர்தலும் ஒரு கற்பனையேயாகி, நிகழ்வுறாது போய்விடும் என்றது.

o
எரு. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
75

பொருள் கோள் முறை:

வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு,
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப.

பொழிப்புரை ( உருள்கின்ற )இவ்வுலகத்து, எல்லா நிலைகளிலும் இன்பம் அடைந்தவர், மேலும் பிறரால் எய்தப்பெறும் (ஆதரவு, பாராட்டு, புகழ் போன்ற சிறப்புகள் எல்லாம், ஏற்கனவே மற்றவர்களிடம் அவர்கள் அன்பு செய்தும், பெற்றும் அமைந்திருந்த நடைமுறையால் நிகழ்வன என்று அதன் தன்மையறிந்தவர் கூறுவர்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. வையகத்து உருள்கின்ற இவ்வுலகத்து. வையம் - சக்கரம். - வையகம் - சக்கரம் போல் உருள்கின்ற உலகம். இதனை நினைவு கூர்ந்தது, அனைத்தும் மாறி மாறி வரும் உலகத்து, மாறாத உயிருணர்வு அன்பு என்று காட்டுதற்காம் என்க.

இன்புற்றார் எய்தும் சிறப்பு: எல்லா நிலைகளிலும் இன்பம் அடைந்தவர், மேலும், பிறரால் எய்தப்பெறும், ஆதரவு, பாராட்டு, புகழ் போன்ற வாழ்வியல் சிறப்புகள் எல்லாம்.

- இதற்குப் பரிமேலழகர், இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்து, மோட்சத்துச் சென்று, எய்தும் பேரின்பம் என்று பொருள் கூறுதல், அவர்க்கே இயல்பாக நின்ற ஆரியவியல் கொள்கை புகுத்தல் என்னும் நோக்கத்தால் என்க .

இது தொடர்பான கருத்துகள் முன்னரே நன்கு விளக்கப் பெற்றுள்ளன.