பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

260


சில விளக்கக் குறிப்புகள்:

1. என்பு இலதனை : எலும்பில்லாத வெறும் தசையுடல் கொண்டபுழுப் போன்றவற்றை.

2. வெயில் காயும் போல: வெயில் காய்ந்து வருத்துவது போல்.

3. அன்பு இலதனை அறம்: அன்பில்லாத வெறும் உடம்புடைய மக்களைஅறவுணர்வு காய்ந்து வருத்தும்.

- அன்பில்லாதவர்களை முன்பே (7) என்பு தோல் போர்த்த வெறும் உடம்பு என்றார்.

- எனவே எலும்பற்ற தசையுடலிகள் வெயிலால் காய்ந்து துன்புறுதலைப் போல், அன்பு இலாத இவர்களும் பொதுமை நலம் சார்ந்த அறவுணர்வால் மனத்தானும், பிற வாழ்வியல் நிலைகளானும் துன்புறுவர் என்றார்.

என்னை? அன்பில்லாத உணர்வு தன்னலம் சார்ந்தது (72); உண்மை, நேர்மை, நடுநிலைமை, ஒழுக்கவுணர்வு முதலிய பண்புகளற்றது (45 (992); பிறர் மேல் பொறாமை கொள்வது (35); பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது (3): தனக்குப் பிடிக்காதவர் மேல் எப்பொழுதும் உள்ளத்தே சினம் வைத்துக் கொண்டே இருப்பது (35); பிறரிடம் இனிமையாகப் பேசாமல் கடுகடுப்பாகவே பேசுவது (35, எப்பொழுதும் அவ்வுள்ளத்தில் தீயவுனர்களே நிரம்பி இருப்பது (35), பிறர் துன்பம் கண்டு இரக்கம் கொள்ளாதது (7): யாரிடமும் நட்புக் கொள்ள விருப்பம் இல்லாதது (74); பிறர் விரும்பி நட்புக் கொள்ளினும், அதைப் பேணிக் கொள்ளாதது (807); அன்பில்லாதவர்கள் கோழைகளாய் இருப்பதால், அவர்கள் துணிவான எச்செயலையும் செய்ய இயலாது (78); பிறர்க்குக் கொடுமை செய்தேனும் பொருளை ஈட்டுவது 75. அந்நெஞ்சில் அருளே இராது 75; அவர்களிடம் சான்றாண்மை இராது (983); எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் வாழ்வில் மலர்ச்சியே இராது(78.)

அதேபோல், அறவுணர்வு என்பது பொது நலம் சார்ந்தது (72); உண்மையானது; நேர்மையானது; பிறர் மேல் நட்புக் கொள்ள ஆர்வமுடையது (78); பிறர் ஆக்கம் கண்டு மகிழ்வது (162 பிறர்க்குத் துன்பம் தராதது (15); (204 சினத்தைத் தவிர்ப்பது (135 பிறரிடம் இனிமையாகப் பேசுவது (93), (96 பிறர்மனை விழையாதது (42), (147), (48), (150); பிறர் பொருள் விரும்பாதது (73), (179; புறங்கூறாதது (18), (182), (183), (185), (189); பிறர்க்கு ஈந்து மகிழ்வது (228), பிறர்பால் அருள் கொள்வது (242, 1757); தீதற்ற நேர்மையான வழியில் பொருளை ஈட்டுவது 754 பழிக்கு நாணுவது