பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

261

அ - 2 - 4 - அன்புடைமை - 8


(1015); ஏழைமைப் படினும் தீய வழியில் பொருளீட்டலைத் தவிர்ப்பது (1047).

- இனி, அன்பில்லாதவர்களை அறம் காயும் சுடும் துன்புறுத்தும் என்பது 'தன் நெஞ்சறிவது பொய் யற்க; பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச்சுடும்' (293) - என்பது போன்றதோர் உருவகம் (Metaphar).

அன்பிலாதவர்களுக்கு அகத்தானும், புறத்தானும் நேரும், மனவியல், வாழ்வியல் தாக்கங்களையும், துன்பங்களையும் அவ்வாறு கூறினார் என்க. இவ்வாறு கூறுவது, கருத்துகளைப் படிப்பார் நெஞ்சில் நன்கு பதிய வைக்கும் ஒருவகைச் செய்யுள் உத்தி என்க.

- இதுபோல் இந்நூலுள் பற்பலவிடங்களில் பரவலாக நூலாசிரியர் கூறியுள்ளமை காண்க.

'வித்துமிடல் வேண்டும் கொல்லோ' (85)
'அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்' (12)
'அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து' (130)
'தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்' (138)
'செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்' (167)
'அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்'
'தீயுழி உய்த்து விடும்' (168)
'வெஃகின், குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்' (17)
'விறல் ஈனும் வேண்டாமை என்னும் செருக்கு' (180)
'சாதல், அறம் கூறும் ஆக்கம் தரும்' (183)
'சீர்மை சிறப்பொடு நீங்கும்' (195)
'மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு '(204)
'தீப்பிணி தீண்டல் அரிது' (227
'கை கூப்பி எல்லா உயிரும் தொழும்' (260)
'மன்னுயிர் எல்லாம் தொழும்' (260)
'பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்' (27)
'படிற்றொழுக்கம் ஏதம் பலவும் தரும்' (275)
'உலகம் பழித்தது' (280)
'களவு வீயா விழுமம் தரும்' (284)
'அறம் போல நிற்கும்' (288)
'சினம், இனமென்னும் ஏமப் புணையைச்சுடும்' (30)