பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

266


4. பூசல் தரும் :மற்றவர்கட்குப் புலப்படுத்தும் - பரிமேலழகர் எல்லாரும் அறியத் தூற்றும் என்றதும், பாவாணர் எல்லாரும் அறியப் பறை சாற்றுதல் என்றதும், பூசல் என்பதற்கு ஊரார் கூறும் அலர் மொழி (1237) என்னும் பொருள் நினைந்து கூறியவை. ஆயினும் இடம் கருதி அச்சொற்கள் பொருந்தா வென்க.

துற்றுதலும், சாற்றுதலும் வேறுவேறு வினையின. குறட்பாக்கள் 200, 71, 712 ஆகியவை கருதுக.

5. மனத்தின்கண் உணர்வுகளை ஒளித்து, மறைத்து வைப்பதை 928, 980,1116, 1253, 1818, ஆகிய பாக்களில் காண்க

6. இதன்வழி உள்ளத்தின் அன்புணர்வை அறிந்து கொள்ளும் வழியையும் வாய்ப்பையும் கூறினார். .

7.பரிமேலழகர் முறை வைப்பில் 71ஆவது குறளாக வைக்கப் பெற்றுள்ள இது, பொருள் நிரல் நிறை கருதி, 78ஆவதாக இங்கு வைக்கப் பெற்றது.

எது. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
79

பொருள் கோன் முறை :

அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர்
அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர்.

பெழிப்புரை உள்ளத்தே இயற்கையாகவே அன்புணர்வு இல்லாதவர், தமக்கும் தம்மைச் சார்ந்த பிற உலக உடைமைகளுக்கும் அவற்றின் துய்ப்பு நலன்களுக்கும் தாமே உரியவராகக் கருதிச் செயல் கொள்ளுவார். ஆனால், அன்புடையவரோ, அவ்வுடைமைகளால் மட்டன்றித் தம் உடம்பாலும் உடம்பினது எலும்பாலும்கூடப் பிறர்க்குத் தாம் உரியவராகக் கருதிச் செயல்படுவர்.

சில விளக்கக் குறிப்புகள்: 1. பரிமேலழகர் முறை வைப்பில் 72ஆவது குறளாக வைக்கப் பெற்றுள்ள இது பொருள் நிரல் நிறை கருதி,79ஆவதாக இங்கு