பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

267

அ - 2 - 4 - அன்புடைமை - 8


வைக்கப் பெற்றது.

2.அன்பிலார் எல்லாம் தமக்குரியர்: அன்பில்லாதவர்கள் தமக்கும், தம்மைச்சார்ந்த உடைமைகளுக்கும் அவற்றின் துய்ப்பு நலன்களுக்கும் எல்லாம் தாமே உரியவராகக் கருதிக்கொள்ளுவர்.

- அன்பிலாரை முதலில் வைத்துப் பேசியது, அவர்கள் உலகத்துப் பெரும்பான்மையராகலான்.

- எல்லாம் என்றது ஒருவர்க்குத் தாமும் தம் உடைமைகளாகக் கருதும் எல்லாவற்றையும் உள்ளடக்கியது.

- அவற்றுக்குத் தாமே உரியராகக் கருதிச் செயல்படுவர் என்பதால், தமக்கு உரியர் என்றார்.

3.அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர்: மற்று, அன்புணர்வு இயல்பாக உள்ளவர்களோ, தம் உடைமைகள் அனைத்திலும் மட்டன்றித் தம் உடம்பு அளவிலும், தம் உடம்பின் எலும்பளவினும்கூடத் தாம் பிறர்க்கு உரியவராகக் கருதிச் செயல்படுவர் என்றார்.

- தமக்குரியர் என்று முன்னரே வந்ததால் 'உரிய பிறர்க்கு' என்னும் நச்சரது பாட்டம் கொள்ளதக்க தன்று.

- என்பு என்றது, என்பு (எலும்பு) போர்த்த உடம்பைப் பொதுவாகக்

- இனி என்பும் உரியர் என்றது, சிறப்பாக இயற்கை எல்லார்க்கும் பொதுமை என வகுத்த உலகியல் பொருள்களை மட்டன்றித் தனக்கே உரியதாகவும், தனி உடம்புக்கே மூலமாகவும் அமைந்துள்ள எலும்பையும் கூட, பிறர்க்கு உரிய பொருளாக அன்புடையார் கருதுவதைக் குறித்தது.

- என்னை? - முதற்கண், அன்புடையார் தாம் வாழ்ந்திருக்கையில், உடம்பாலும், அது கொண்ட உணர்வானும் பிறர் பொருட்டாக, அவர், உழைத்ததைக் குறித்தது என்க.

- இனி, அவர் மறைந்த பின்பும் அவரது உடம்பைத் தீயினால் சுட்டுச் சாம்பலாக்கிய அவ்வெலும்பைப் பிறர் கொண்டு, சமயவுனர் வடிப்படையில், நீரிலும், நிலத்திலும், கரைக்கவும் துவவும் செய்யும் வகையில்,அதைப் உனர்தியது என்க.

- அன்புடையார், உடம்பால் பிறர்க்குரியராவதைச் செம்பியன் (செம்பிசிபி) என்னும் சோழ வேந்தன், தன்னகம் புகுந்த ஒரு