பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

268



புறாவிற்காகத் தன் உடம்பின் தசையை அரிந்து கொடுத்ததைப் (புறம்:43) பரிமேலழகர் எடுத்துக் காட்டாகக் கூறியதையும்.

- குமணன் என்னும் பெருங்கொடையன், தன்னைப் பாடிய பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர்க்குத் தன் தலையினைக் கொண்டுபோய்த் தன் தம்பி கைக் கொடுத்து, அதன் விலையினைப் பெறுக எனக் கூறி, வாளெடுத்துத் தந்த நிகழ்வையும், புறம்: (165); - பறம்பின் பாரி வள்ளல், பரிசிலர் இரப்பின் வாரேனென்னான் அவர் வரையன் என்று கபிலர் பாடியதையும் (புறம்: 108), சிறந்த எடுத்துக் காட்டுகளாகப் பாவாணர் கூறியதையும், இங்குத் தமிழியல் வரலாற்று நிகழ்வுகளாகப் பொருத்தி மகிழலாம்,

- இனி, ஆரியவியல் தொன்ம (புராணத்திலும், ததிசி என்னும் முனிவன், தம்மவர் போரில் வெல்லுவதற்கு, அவர் படைத் தலைவன் இந்திரனிடம், தன் முதுகெலும்பையே வன்கருவி வச்சிராய்தம்) ஆக்கிக் கொள்ள உதவினான் என்பதைப் பரிமேலழகர் உரை விளக்க ஆசிரியர் கோ. வடிவேலனாரும் (1904) உரையாசிரியர், கா. சுப்பிரமணியனார் (1928) அவர்களும் எடுத்துக் காட்டியதையும் உவந்து நினைவிற் கொள்ளலாம்.

4. இதன்வழி அன்பிலாரையும், அன்புடையாரையும் செயல்வழி வேறுபிரித்தறிய விளக்கம் கூறினார்.

அ0. அறத்திற்கே அன்புசார் பென் அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. 80

பொருள் கோள் முறை :

அன்பு அறத்திற்கே சார்பு என்ப, அஃதே
மறத்திற்கும் துணை அறியார்.

பொழிப்புரை : அன்பு அறத்திற்கு மட்டுமே சார்பானது என்று கூறுவர்; அது, வன்மம் அற்ற வீரத்திற்கும் துணையாக இருப்பதை அவர் அறியார்.