பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

269

அ - 2 - 4 - அன்புடைமை - 8


சில விளக்கக் குறிப்புகள் :

1.பரிமேலழகர் முறை வைப்பில், 76ஆவது குறளாக வைக்கப் பெற்றுள்ள இது, இங்கு 80ஆவது குறளாக, கருத்து நிரல் நிறை கருதி வைக்கப் பெற்றுள்ளது.

2.`அறத்திற்கே அன்பு சார்பு என்ப: மக்கள் பொதுமை நலம் கருதும் அற உணர்விற்கும் அதன் வழியாய அறச் செயல்களுக்கும் அன்புணர்வே ஓர் இயங்குனர்வாக உள்ளது என்று கூறுவர்.

சார்பு என்பது ஒட்டி இயங்கும் ஒரு நிலை. அன்பு சார்பு என்றது, அன்புணர்வை ஒட்டியே - அதனை அடிப்படையாகக் கொண்டே - அறம் இயங்கும் என்பதால்.

'சார்பு' என்பதைச் 'சால்பு' என்று தருமர் பாடங் கொண்டது தகாது'.

அன்பு என்பது உயிரியல், அறம் என்பது உலகியல். அஃதாவது உலக இயங்கியல்.

ஆனால், உலக இயங்கியலுக்கு அறம் ஒன்று மட்டுமே அடிப் படையதாக இல்லை; வீரமும் அடிப்படையாக உள்ளதைப் பலர் அறிவதில்லை. அறம் ஒரு கருவி என்று கொண்டால், வீரம் அதன் முனையாக, இருப்பதை உணர்தல் வேண்டும். எனவேதான் மறத்திற்கும் அதுவே துணை என்றார்.

3.மறத்திற்கும் அஃதே துணை, அறியார்: வன்முறையற்ற வீரத்திற்கும் அன்பு துணையாக இருப்பதைப் பலர் அறியார். மறம் - வீரம் துணிவு முனைவு.

- அறம் ஒரு செயலாக இயங்குவதற்கு வீரம் முனைப்பாக முன் நடத்திச் செல்லும் ஒரு முந்துணர்வாக இயங்குதல் வேண்டும்.

- முந்துணர்வு முனைவுணர்வு துணிவுணர்வு. இஃது இல்லையென்றால், செயலில்லை. செயலுக்கு - வினைக்கு கருமத்திற்குத் துணிவு வீரம் - தேவையென்பதை உணர்தல் வேண்டும்.

- எண்ணம் - துணிவு கருமம் - என உலக இயங்கியல் முறையில் ஆசிரியர் பிறிதோரிடத்தில் (467) இதனை எடுத்துக் கூறியது, காண்க. மேலும், சில இடங்களில் (669), (671), (688) அதனையே வலியுறுத்தியும் கூறுவர்.

- மறம் வன்மம் இல்லாத வீரம் கழகக் காலத்தில் மறம் என்னும்