பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

270


சொல் வீரம் என்றே பொருள் கொண்டிருந்தது. பிற்காலத்தில் அது கொடுஞ்செயல் என்று பொருள் பெறுவதாயிற்று என்க.

- வன்மம் (கொடுமை, வஞ்சகம், பழிவாங்கும் உணர்வு உள்ள வீரம் மறம் ஆகாது; அஃது அழித்தலுணர்வாம்.

- 'மறம்' என்பதற்குக் காலிங்கர் முதலிய உரையாசிரியர் 'பாவம்' என்று பொருள் கொள்வது நேரிடையான பொருளன்று. இருபடி தாண்டிய பொருள் என்க. -பாவாணர் அறம் - நல்வினை என்றும், மறம் தீவினை என்றும் கூறியதும் அத்தகையதே.

- இனி, 'அறத்திற்கு அன்பு சார்பு' என்பதற்கு அனைத்து உரையாசிரியரும் ஒத்துரை தந்து, "மறத்திற்கும் அஃதே துணை "என்பதில் பெரிதும் மாறுபட்டும் வேறுபட்டும் நிற்பது குறிப்பிடத்தக்கது.

- பரிமேலழகர் பகைவனை நட்பாகக் கருதி அன்பு செய்ய அது நீங்குமாகலின், மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்றார் - என்பர். இதற்கு ஆசிரியரின், துன்பத்திற்குத் துணை (1299 என்னும் கூற்றையே துணையாக்கினார்.

- பரிதியாரும், பாவாணரும் இதையே ஒட்டியுரைத்து அவர்க்குத் துணையாகினர்.

- பாவாணர் மேலும், 'அன்பு மறத்திற்குத் என்பது, இஞ்சி பித்தத்திற்கு நல்லது' என்பது போல்வது, என்று எடுத்துக்காட்டி விளக்கினார்.

- இதைப் பிணிக்கு மருந்து என்று எடுத்துக்காட்டியும் விளக்கினார். கோ, வடிவேலனார்.

- மறத்திற்கும் அதுவே துணை என்பதற்கு மறத்தை நீக்குவதற்கும் அதுவே துணை, என்று கூறியது, நடுவு பெய்து பொருளுரைக்கும் உத்தி எனப்பெறும். நீக்குவதற்கும். என்னும் சொல் நடுவே பெய்யப்பெற்றது. இதை வடநூலார் துமர்த்தம் என்று கூறுவதாகப் பிரயோகவிவேக நூலார் கூறுவர். தமிழில் இதனை, வருவித்துப் பொருள் கோடல் என்பர்.

இனி இத்தொடருக்கு

"தீமையை யொழிப்பதற்கும் அவ்வன்பே துணையாகும் என்றும், பாவ வீரச் செயல்களுக்கும் கூட அவ்வன்பு துணையதல் உண்டு". என்றும், குமுகாயத்திற்காக சகஞ்செய்யும், வீரவாழ்க்கைக்கும் கூட